இரண்டு டன் யானை தந்தங்கள் அழிப்பு

அமெரிக்காவில் சிக்கிய 2 டன் அளவிலான யானைத் தந்தப் பொருள்களை வனப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை அழித்தனர்.
நியூயார்க் நகரில் யானை தந்தங்கள் மற்றும் தந்தங்களாலான பொருள்களை அழிப்பதைக் காண வந்த பொதுமக்கள்.
நியூயார்க் நகரில் யானை தந்தங்கள் மற்றும் தந்தங்களாலான பொருள்களை அழிப்பதைக் காண வந்த பொதுமக்கள்.

அமெரிக்காவில் சிக்கிய 2 டன் அளவிலான யானைத் தந்தப் பொருள்களை வனப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை அழித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
நியூயார்க் மாகாணத்துக்குள் சட்ட விரோதமாக கடத்தி வந்த யானைத் தந்தங்கள் மற்றும் யானை தந்தப் பொருள்கள் குறித்து வனப் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த 300 அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த மூன்று ஆண்டுகளாக அவர்கள் நடத்திய தீவிரப் புலன்விசாரணையில் 2 டன் யானை தந்தப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. அதில் சுமார் ரூ.1.30 கோடி மதிப்பிலான ஒரு ஜோடி யானைத் தந்தம் அடங்கும். பிடிபட்ட 1600-க்கும் அதிகமான யானை தந்தப் பொருள்கள் நியூயார்க்கில் உள்ள சென்ட்ரல் பார்க் பகுதிக்கு எடுத்துவரப்பட்டு அவை பொதுமக்கள் முன்பாக அழிக்கப்பட்டன என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
வன விலங்கு பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த ஜான் கால்வெல்லி கூறியதாவது:
அமெரிக்காவில் பொது இடத்தில் யானை தந்தங்களையும் தந்தப் பொருள்களையும் அழிப்பது இது மூன்றாவது முறையாகும். கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் அதிகாரிகள் எடுத்து வரும் தொடர் நடவடிக்கையால் யானை தந்தப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன.
தந்தத்துக்காக ஆப்பிரிக்காவில் நாள்தோறும் சராசரியாக 96 யானைகள் கொல்லப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தந்தங்களை வெட்டியெடுப்பதற்காக ஆண்டுக்கு 35,000 யானைகள் சமூக விரோதிகளால் கொல்லப்படுவது மிகவும் கொடுமையானது.
இதனை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் இதுபோன்ற தந்த அழிப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தந்தத்தால் உருவாக்கிய பொருள்களை வாங்குவதை நிறுத்தி யானைகளின் உயிரைக் காப்போம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com