எகிப்து: வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 50 போலீஸாருக்கு 3 ஆண்டு சிறை

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 50 போலீஸாருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து எகிப்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 50 போலீஸாருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து எகிப்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
காவல் துறையினருக்கான பணி நேரம், விடுப்பு உள்ளிட்டவை குறித்த புதிய விதிமுறைகளை அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது. மாதத்தில் 20 நாள் பணி, 10 நாள் ஓய்வு, வருடாந்திர விடுப்பு நாட்கள் தொடர்பான புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கீழ்நிலை போலீஸார் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதற்கு முன்னர் 15 நாள் பணி, 15 நாள் ஓய்வு என்கிற விதிமுறை இருந்தது. இந்த நிலையில், வேலைநிறுத்தத்தை தூண்டிய 50 போலீஸார் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணை எகிப்தின் தெற்கு சினாய் மாகாண நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
விசாரணை முடிவில், கிளர்ச்சியைத் தூண்டும் விதமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக, 50 போலீஸாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. மேலும், அவர்களுக்குத் தலா 6,000 எகிப்து பவுண்ட் (சுமார் ரூ.23,000) அபராதமும் விதிக்கப்பட்டது. முன்னதாக, வழக்கு நடைபெற்று வந்த நிலையில் அந்தக் காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com