"சிரியா அதிபர் மீது போர்க்குற்றம் சுமத்த போதுமான ஆதாரம்'

சிரியா அதிபர் பஷார் அல்-அஸாத் மீது போர்க் குற்றம் சுமத்துவதற்குப் போதுமான ஆதாரம் உள்ளதாக ஐ.நா. சார்பில் அமைத்த விசாரணைக் குழுவில் இடம் பெற்ற உறுப்பினர் தெரிவித்திருக்கிறார்.

சிரியா அதிபர் பஷார் அல்-அஸாத் மீது போர்க் குற்றம் சுமத்துவதற்குப் போதுமான ஆதாரம் உள்ளதாக ஐ.நா. சார்பில் அமைத்த விசாரணைக் குழுவில் இடம் பெற்ற உறுப்பினர் தெரிவித்திருக்கிறார்.
ஐ.நா. சிரியா விசாரணை ஆணையம் என்று அறியப்படும் விசாரணை அமைப்பு 5 ஆண்டுகளுக்கு முன்பு சிரியா உள்நாட்டுப் போர் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டது. அதில் இடம் பெற்றவர் ஸ்விட்ஸர்லாந்தைச் சேர்ந்த கார்லா டெல்போன்டி. அந்த ஆணையம் நடத்திய ஆய்வுகளிலிருந்து சிரியாவில் போர்க்குற்றம் நடைபெற்றுள்ளது என்பது உறுதியாகத் தெரிகிறது என்று ஸ்விஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார். "போர்க்குற்றம் தொடர்பாக சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்த வேண்டுமானால் அதற்கான அடிப்படைத் தகவல்கள் தற்போது உள்ளன. ஆனால் ஐ.நா. பாதுகாப்புக் குழுதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்' என்றார் அவர்.
சிரியாவில் அதிபர் அல்-அஸாதுக்கு எதிராக 2011-ஆம் ஆண்டு ஆயுதக் கிளர்ச்சி தொடங்கியது. இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அந்தக் கிளர்ச்சியில் இணைந்தனர். உள்நாட்டுப் போரில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ரசாயனத் தாக்குதல் நடத்தியதாக அல்-அஸாத் மீது குற்றம் சாட்டப்பட்டது. உள்நாட்டுப் போரில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். லட்சக்கணக்கானோர் நாட்டைவிட்டு வெளியேறி ஐரோப்பாவில் தஞ்சம் புகுந்தனர்.
சிரியா அதிபர் அல்-அஸாதை பதவியிலிருந்து நீக்குவதை முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு, இஸ்லாமிய அடிப்படைவாதிகள் உள்ளிட்ட கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா உதவி வந்தது. இந்நிலையில், ஐ.எஸ். பயங்கரவாதிகள் அழிப்பில் கவனம் திரும்பியதுடன், கிளர்ச்சியாளர்களுக்கு அளித்து வந்த உதவியை அமெரிக்கா மறு பரிசீலனை செய்து வருகிறது. இப்போது ரஷியா முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com