தயார் நிலையில் ஜப்பான் ஏவுகணைகள்

வட கொரியாவின் ஏவுகணைத் தாக்குதல் மிரட்டலையடுத்து, ஜப்பான் தனது தடுப்பு ஏவுகணைகளைத் தயார் நிலையில் வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அறிவித்தது.
ஜப்பானின் ஹிரோஷிமா மாகாணம், கயீட்டா நகரில் அந்நாட்டு ராணுவம் சனிக்கிழமை ஈடுபடுத்திய பேட்ரியட் ஏவுகணை. எதிரியின் ஏவுகணையை விண்ணிலேயே தடுத்து வெடிக்கச் செய்யும் திறன் உள்ளது பேட்ரியட் ஏவுகணை.

அமெரிக்க அதிகாரத்துக்கு உள்பட்ட குவாம் தீவைத் தாக்க வட கொரியா ஏவுகணையைச் செலுத்துமானால், அது ஜப்பான் வான் எல்லைப் பகுதியில் பறந்து சென்றுதான் பசிபிக் பெருங்கடலில் உள்ள இலக்கை அடைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஜப்பான் அரசு தொலைக்காட்சி இது தொடர்பாக சனிக்கிழமை வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டிருப்பது: வட கொரியாவின் மிரட்டலையடுத்து, ஜப்பான் தனது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. விரோத சக்திகளின் ஆயுதங்கள் ஜப்பான் எல்லைப் பகுதிக்குள் கடக்குமானால் அதனைத் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஷிமானே, ஹிரோஷிமா, கோச்சி ஆகிய ராணுவ ஏவுதளங்களில் அதிநவீன பேட்ரியட் ஏவுகணைகள் ஆயத்த நிலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. விரோத சக்திகளின் ஏவுகணைகள் ஜப்பான் வான் எல்லைப் பகுதிக்குள் நுழைந்தால் அவை சுட்டு வீழ்த்தப்படும் என்று தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com