அண்டார்டிகாவில் 100 எரிமலைகள் கண்டுபிடிப்பு!

அண்டார்டிகா பனிப்பிரதேசத்தில் 100 எரிமலைகள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அண்டார்டிகா பனிப்பிரதேசத்தில் 100 எரிமலைகள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்ததாவது: அண்டார்டிகா பனிப்படலத்துக்கு கீழே இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் 100 எரிமலைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பனியால் ஆன தடிமனான அடுக்குகளால் பத்திரமாக மூடப்பட்டுள்ளன. புதிதாக கண்டறியப்பட்ட எரிமலைகள் 100 மீட்டர் முதல் 3,850 மீட்டர் வரை உயரம் கொண்டவையாக உள்ளன.
அண்டார்டிகா ராஸ் பனித் தகடு பகுதியில் தென்படத் தொடங்கும் இந்த எரிமலைகள் 3,500 கி.மீ. தொலைவில் உள்ள அண்டார்டிகா தீபகற்ப பகுதி வரை நீண்டுள்ளன. இந்த பகுதியில் மேலும் பல எரிமலைகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com