தொழில்நுட்பத் திருட்டை விசாரித்தால் வர்த்தகப் போர்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

தங்கள் மீதான தொழில்நுட்பத் திருட்டு குற்றச்சாட்டு குறித்து அமெரிக்கா விசாரணை மேற்கொண்டால் வர்த்தகப் போர் மூளும் என்று சீனா அரசு ஊடகம் எச்சரித்திருக்கிறது.

தங்கள் மீதான தொழில்நுட்பத் திருட்டு குற்றச்சாட்டு குறித்து அமெரிக்கா விசாரணை மேற்கொண்டால் வர்த்தகப் போர் மூளும் என்று சீனா அரசு ஊடகம் எச்சரித்திருக்கிறது.
சீன வர்த்தகத் துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வ ஊடகமான தி சைனா டெய்லி இது தொடர்பாக வெளியிட்டுள்ள தலையங்கத்தில் தெரிவித்திருப்பது: அமெரிக்க தொழில்நுட்பத்தை சீனா திருடியதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்வது தொடர்பாக அமெரிக்க அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அப்படியொரு விசாரணை மேற்கொள்ளப்படுமானால் இரு நாட்டு உறவுகளில் மேலும் இறுக்கம் ஏற்படும். அநாவசியமான பதற்றம் உருவாகும். அதுபோன்ற விசாரணையால் இரு நாடுகளிடையே வர்த்தகப் போர் மூளும் அபாயம் உள்ளது.
அவசர முடிவு எடுக்காமல் அமெரிக்கா தீர ஆலோசித்து இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று சீன வர்த்தக அமைச்சகத்தின் அதிகாரபூர்வ நாளிதழ் எச்சரித்திருக்கிறது. அமெரிக்காவில் கடந்த 1975-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வர்த்தக சட்டம் அந்த நாட்டில் உருவான அனைத்து தொழில்நுட்பங்கள், அறிவுசார் சொத்துகளையும் பாதுகாக்கிறது. முறையான முன் அனுமதியின்றி அமெரிக்க தொழில்நுட்பங்களையோ, அறிவுசார் சொத்துகளையோ வேறொரு நாட்டின் நிறுவனம் பயன்படுத்தினால் அந்த வெளிநாட்டு நிறுவனத்தின் மீதும், அந்த நாட்டின் பிற பொருள்களின் இறக்குமதிக்கு எதிராகவும் கடும் நடவடிக்கைகள் எடுக்க அந்த சட்டம் வகை செய்கிறது.
இந்நிலையில், அமெரிக்க தொழில்நுட்பத்தை சீனா களவாடியதா என்பது குறித்தான விசாரணையை மேற்கொள்ள அமெரிக்க வர்த்தகத் துறைக்கு உத்தரவிடுவது தொடர்பாக அதிபர் டிரம்ப் ஆலோசித்து வருகிறார் என்ற தகவல் கடந்த சனிக்கிழமை வெளியானது. அதிபர் மாளிகை மூத்த அதிகாரி இந்தத் தகவலை வெளியிட்டதைத் தொடர்ந்து சீன வர்த்தகத் துறை பரபரப்படைந்தது.
இந்தத் தகவல் வெளியானதையடுத்து, இரு நாடுகள் இடையே வர்த்தகப் போர் மூளும் என்ற எச்சரிக்கையை சீன வர்த்தகத் துறை அமைச்சகம் விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com