வட கொரிய பொருள்கள் இறக்குமதிக்கு சீனாவில் தடை

வட கொரியாவிலிருந்து எஃகு உள்ளிட்ட பொருள்களை இறக்குமதி செய்ய சீனா திங்கள்கிழமை தடை விதித்தது.

வட கொரியாவிலிருந்து எஃகு உள்ளிட்ட பொருள்களை இறக்குமதி செய்ய சீனா திங்கள்கிழமை தடை விதித்தது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை உத்தரவுகளை மீறி அணு குண்டு சோதனைகள், ஏவுகணை சோதனைகளில் வட கொரியா ஈடுபட்டு வந்தது. மேலும் கண்டம் விட்டு கண்டம் பாயும் இரு ஏவுகணை சோதனைகளை நிகழ்த்தி அமெரிக்காவைத் தாக்குவதாக மிரட்டியது. இதையடுத்து, வட கொரியாவிலிருந்து எஃகு, இரும்பு தாது, உணவு மீன் வகைகள், நிலக்கரி ஆகியவற்றை உலக நாடுகள் இறக்குமதி செய்யத் தடை விதித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியது. பதினைந்து நாடுகள் கொண்ட கவுன்சில் ஒருமனதாக அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியது.
இந்த நிலையில், வட கொரியாவின் நட்பு நாடான சீனா அந்தப் பொருள்களை இறக்குமதி செய்வதைத் தடை செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டது. இறக்குமதி தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்று சீனா தெரிவித்திருக்கிறது.
இந்தப் பொருள்களின் ஏற்றுமதி மூலம் வட கொரியா ஆண்டுக்கு 100 கோடி டாலர் (சுமார் ரூ. 6,500 கோடி) வருவாய் ஈட்டி வந்தது.
அமெரிக்க நிலப்பரப்பில் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் குறி வைத்துத் தாக்கும் திறன் பெற்றுவிட்டதாக வட கொரியா மிரட்டி வருவதையடுத்து, போருக்கு ஆயத்தமான நிலையில் இருப்பதாக அமெரிக்கா அறிவித்ததால், பதற்ற நிலை அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com