குவைத்: கடலில் பரவும் கச்சா எண்ணெய்

குவைத்: கடலில் பரவும் கச்சா எண்ணெய்

குவைத்தின் தெற்குக் கடலோரப் பகுதியில் மர்மமான முறையில் கசிந்து பரவி வரும் கச்சா எண்ணெய், தற்போது 131 சதுர கி.மீ. பரப்பளவில் பரவியுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த தன்னார்வ நிறுவனம்

குவைத்தின் தெற்குக் கடலோரப் பகுதியில் மர்மமான முறையில் கசிந்து பரவி வரும் கச்சா எண்ணெய், தற்போது 131 சதுர கி.மீ. பரப்பளவில் பரவியுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த தன்னார்வ நிறுவனம் தெரிவித்துள்ளது.
'ஸ்கைடுரூத்' என்ற அந்த நிறுவனம், செயற்கைக்கோள் படங்களின் உதவியுடன் ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 34,000 பேரல் கச்சா எண்ணெய் கடலில் கலந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
உலகின் 6-ஆவது மிகப் பெரிய எண்ணெய் வளத்தைக் கொண்டுள்ள குவைத், தனது கடலோரப் பகுதியில் கச்சா எண்ணைய் கசிவதாகவும் , எண்ணெய்க் கப்பல் ஒன்றிலிருந்து அந்தக் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com