'வட கொரியா தாக்குதலை தொடங்கினால் அமெரிக்கா பதிலடி'

அமெரிக்கா அல்லது அதன் நட்பு நாடுகளைக் குறி வைத்து வட கொரியா தாக்குதலைத் தொடங்குமானால், உடனடியாக பதிலடித் தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர்
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில்பேச்சுவார்த்தை நடத்திய ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சர் இட்ஸுநோரி ஓனோடேரா, வெளியுறவுத் துறை அமைச்சர் டாரோ கோனோ, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில்பேச்சுவார்த்தை நடத்திய ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சர் இட்ஸுநோரி ஓனோடேரா, வெளியுறவுத் துறை அமைச்சர் டாரோ கோனோ, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்

அமெரிக்கா அல்லது அதன் நட்பு நாடுகளைக் குறி வைத்து வட கொரியா தாக்குதலைத் தொடங்குமானால், உடனடியாக பதிலடித் தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் எச்சரிக்கை விடுத்தார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர் டாரோ கோனோ, ஜப்பானிய பாதுகாப்புத் துறை அமைச்சர் இட்ஸுநோரி ஓனோடேரா ஆகியோருடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
ராணுவ ரீதியாக அமெரிக்கா எதற்கும் தயாரான ஆயத்த நிலையில் உள்ளது. அமெரிக்காவின் கூட்டு நாடுகளும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஆயத்த நிலையில் உள்ளன. வட கொரியாவின் தாக்குதல் மிரட்டலை செயல்படுத்தினால் உடனடியாக பதிலடித் தாக்குதல் நிகழ்த்துவோம். ஆனால் போர் என்ற வழிமுறையை அமெரிக்கா தேர்ந்தெடுக்காது என்று அதிபர் டிரம்ப் ஏற்கெனவே திட்டவட்டமாக கூறியுள்ளார். ஆனால் அமெரிக்காவையோ, அதன் கூட்டு நாடுகளையோ குறி வைத்து எவராவது தாக்குதல் நிகழ்த்தினால், உடனடியாக பதிலடி தரத் தயாராக இருக்கிறோம். தென் கொரியா, குவாம் தீவுகள், ஜப்பான் ஆகிய இடங்களைக் குறி வைத்து ஏவுகணை வீசப்பட்டால் அதனை நடுவானில் சுட்டு வீழ்த்துவோம். அமெரிக்காவின் கூட்டு நாடுகளுக்கு எந்த வகையானஅச்சுறுத்தல் வந்தாலும் அமெரிக்கா அதனை உறுதியுடன் எதிர்த்து நடவடிக்கை எடுக்கும் என்றார் ஜேம்ஸ் மேட்டிஸ்.
ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சர் இட்ஸுநோரி ஓனோடேரா கூறுகையில், கூட்டு நாடு என்ற முறையில் ஜப்பானின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்கா எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது திருப்தி அளிப்பதாக இருக்கிறது; எங்களது ஏவுகணைத் தடுப்பு தளவாடங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. ஜப்பான் தன்னைத் தற்காத்துக் கொள்ள முழு ஆயத்த நிலையில் உள்ளது என்றார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியது: பேச்சுவார்த்தை நடத்த வட கொரியா முன்வர வேண்டும். உண்மையிலேயே அமைதியை விரும்பி பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும்.
இதற்கு முந்தைய காலங்களில் இருந்ததுபோன்ற நிலை இப்போது இல்லை. நிலைமை மிகவும் தீவிரமடைந்துள்ளது. வட கொரியாவிடம் இப்போது ஆயுத பலம் உள்ளது.
அதனால் அந்த நாடு மேலும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். தவறாக ஒரு அடி எடுத்து வைத்தாலும் அந்நாட்டுக்கு அது மிகக் கடுமையான விளைவை ஏற்படுத்தும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com