"இந்தியா-சீனா இடையேயான விரிசல் மோதலுக்கு வழிவகுக்கும்'

டோகலாம் விவகாரத்தில் இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள விரிசல் மோதலுக்கு வழிவகுத்துவிடும் என்று அமெரிக்க எம்.பி.க்கள் அடங்கிய குழுவின் (சிஆர்எஸ்) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டோகலாம் விவகாரத்தில் இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள விரிசல் மோதலுக்கு வழிவகுத்துவிடும் என்று அமெரிக்க எம்.பி.க்கள் அடங்கிய குழுவின் (சிஆர்எஸ்) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பக்கங்கள் கொண்ட அந்த ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியா-சீனா-பூடான் நாடுகளின் எல்லையையொட்டி அமைந்திருக்கும் டோகலாம் பகுதியில் சீனாவும், இந்தியாவும் ராணுவ வீரர்களைக் குவித்து வருகின்றன.
இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த விரிசல் மோதலுக்கு வழிவகுத்துவிடும். அமெரிக்காவும், இந்தியாவும் ஒத்துழைப்புடன் செயல்படும் பட்சத்தில் அது சீனாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
டோகலாம் விவகாரம் இந்தியா-சீனா இடையே யார் அதிக பலம் வாய்ந்த நாடு என்ற போட்டியை ஏற்படுத்திவிடும்.
மேலும், டோகலாம் விவகாரமாக மட்டுமல்லாமல் இமயமலையையொட்டிய எல்லைப் பகுதியில் 2,167 கி.மீ. தொலைவுக்கு இருக்கும் சர்ச்சைக்குரிய பகுதி தொடர்பான பிரச்னையாகவும், தெற்காசிய பிராந்திய பிரச்னையாகவும் உருவெடுத்துவிடும்.
அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராகச் சேர்வதற்கு சீனா முட்டுக்கட்டை போட்டுவருவதும், பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டுவரும் பயங்கரவாதியை (மசூத் அஸார்) ஐ.நா. பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கவும் சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இந்தியா மிகுந்த அதிருப்தியில் உள்ளது.
இதேபோல், தங்கள் நாட்டில் நடைபெற்ற "ஒரே பாதை, ஒரே மண்டலம்' மாநாட்டில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணிப்பு செய்தது, அருணாசலப் பிரதேசத்துக்குள் திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவை செல்ல அனுமதித்தது, அமெரிக்காவுடன் நட்பு பாராட்டி வருவது ஆகிய விவகாரங்களில் இந்தியா மீது சீனா அதிருப்தியில் உள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கை அமெரிக்கா நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையாகக் கருதப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
டோகலாம் விவகாரத்தில் இருநாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்கா ஏற்கெனவே வலியுறுத்தி
யுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com