பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் மனித உரிமை மீறல்

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருவதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7 பேர் கவலை தெரிவித்தனர்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருவதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7 பேர் கவலை தெரிவித்தனர்.

இதுதொடர்பாக தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் துணைச் செயலர் அலைஸ் ஜி. வேல்ஸ், பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதர் டேவிட் ஹாலே ஆகியோருக்கு கடந்த 17-ஆம் தேதி அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் குறித்து எங்களது கவலையை இந்தக் கடிதத்தின் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறோம். பாகிஸ்தானில் அண்மையில் தலைமை மாற்றம் (புதிய அதிபர் பதவியேற்றது) ஏற்பட்டுள்ளது.
எனவே, புதிய தலைமையிடம் சிந்து மாகாணத்தில் நடைபெறும் மனித உரிமை மீறல் விவகாரத்தை நீங்கள் கொண்டு செல்ல வேண்டும். சிந்து மாகாணத்தில் பொய் வழக்குகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை மீட்க அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். சிறுபான்மையினரான "சிந்தி' இன மக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதில் இருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com