பாம்பு மஸாஜ் பற்றி கேள்விப்பட்டதுண்டா?

நீங்கள் இதுவரை பலவித மசாஜ்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் சிலவற்றை முயற்சி செய்தும் பார்த்திருப்பீர்கள்.
பாம்பு மஸாஜ் பற்றி கேள்விப்பட்டதுண்டா?

நீங்கள் இதுவரை பலவித மஸாஜ்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் சிலவற்றை முயற்சி செய்தும் பார்த்திருப்பீர்கள். வாசனை எண்ணெய்களைக் கலந்து உச்சி முதல் உள்ளங்கால் வரை உடல் முழுவதும் தடவி, அதன் பின் மஸாஜ் செய்வது, சூடான கற்களை முதுகில் அடுக்கி வைத்து ஒத்தடம் கொடுக்கப்படும் ஸ்டோன் மஸாஜ், மெல்லிய இசையைக் கசிய விட்டு தலைக்கு மேல் உள்ள பாத்திரத்திலிருந்து சொட்டு சொட்டாக எண்ணெயை நெற்றிப் பகுதிகளில் வழிய விட்டு ஜென் மனநிலைக்கு அழைத்துச் செல்லும் ஆயுர்வேத ஆரோக்கிய மஸாஜ், மீன்களை வைத்து கால்களை கடிக்கச் செய்யும் மஸாஜ் என்று பலவிதமான மஸாஜ் ஸ்பா மையங்களில் புழுக்கத்தில் உள்ளது. சமீபத்தில் பாம்பு மஸாஜ் பற்றிக் கேள்விப்பட்ட போது அரவம் தீண்டியது போலவே இருந்தது. அதென்ன பாம்பு மஸாஜ்?

'ஸ்னேக் தெரபி' என்று அழைக்கப்படும் இந்த பாம்பு மஸாஜின் பூர்வீகம் இந்தோனிஷாவிலுள்ள ஜகார்த்தா. ஊர்வன வகை ஜந்துக்களை (வேறென்ன வித விதமான பாம்புகள் தான்) வெற்றுடம்பில் வைத்துவிடுவார்கள். கேட்கவே பயமாக இருக்கிறதா? கவலை வேண்டாம், இந்தப் பாம்புகள் விஷமற்றது. தவிர அவை நன்றாக சாப்பிட்ட பின் தான் உங்கள் மீது போடுவார்கள். நீங்கள் கண்களையும் காதுகளையும் மூடியிருக்க வேண்டும். அவை ஊர்ந்து செல்லும் போது சருமத்தில் சில பல மாற்றங்கள் நடக்கும். உடலின் குறுக்கு நெடுக்காக இந்தப் பாம்புகள் கேட் வாக் இல்லை இல்லை, ஸ்னேக் வாக் செய்கையில் அட்ரலைன் சுரப்பு அதிகரிக்கும். பாம்பு பற்றிய பயம், மரண பயம் போன்ற பலவிதமான பய உணர்வுகளை வெற்றி கொள்ள இந்த மருத்துவ தெரபி உதவுமாம். தவிர இது உடலின் மெட்டாபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும் என்கிறார்கள் மஸாஜ் நிபுணர்கள். நீங்கள் பயப்படாமல் இருக்க மஸாஜ் கட்டிலுக்கு அருகே இரண்டு நிபுணர்கள் இருப்பார்கள். பாம்பு கீழே விழுந்தாலோ அதன் வேலையைச் செய்யாமல் (ஊர்ந்து செல்லாமல்) இருந்துவிட்டால் அதைத் தூண்டி மீண்டும் உங்கள் மீது ஊர்ந்து செல்லச் செய்வார்கள். 

இந்தத் தெரபி கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் வரை நடக்கும் (45 டாலர்களை வசூலித்துவிடுவார்கள்) ஆனால் இந்த தெரபி உங்களுக்கு நிச்சயம் ஒரு புதுவிதமான அனுபவமாக இருக்கும், நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு காசுக்கும் மதிப்பு உண்டு என்கிறார்கள் ஸ்னேக் தெரபியில் ஊறியவர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com