ஜப்பான் ராணுவம் தீவிர போர்ப் பயிற்சி

ஜப்பான் ராணுவத்தின் முழு அளவிலான போர்ப் பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது.
போர்ப் பயிற்சியில் ஈடுபட்ட ஜப்பான் பாதுகாப்புப் படை வீரர்கள்.
போர்ப் பயிற்சியில் ஈடுபட்ட ஜப்பான் பாதுகாப்புப் படை வீரர்கள்.

ஜப்பான் ராணுவத்தின் முழு அளவிலான போர்ப் பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது.
வட கொரியாவின் ஏவுகணை மிரட்டலையடுத்து இது நடைபெறுவதால் இந்த மூன்று நாள் போர்ப் பயிற்சி முக்கியத்துவம் பெறுகிறது.
ஜப்பான் பாதுகாப்புப் படைகளின் தலைமை தளபதி கோஜி யமஸாகி இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது:
நாட்டைச் சுற்றிலும் நடைபெற்று வரும் பல்வேறு விவகாரங்கள் ஜப்பானை போர்ப் பயிற்சியில் ஈடுபடத் தூண்டியுள்ளன. தென் சீனக் கடல் பகுதியில் பாரம்பரிய உரிமைகளைக் கேள்விக்குறியாக்கும் சீன நடவடிக்கைகள், வட கொரியாவின் ஏவுகணை மிரட்டல்கள் போன்ற நடவடிக்கைகள் ஜப்பானை உஷார் நிலையில் வைத்திருக்கத் தூண்டியுள்ளன. இதையடுத்து ஜப்பான் பாதுகாப்புப் படைகளின் முழு அளவிலான போர்ப் பயிற்சிக்குத் திட்டமிடப்பட்டது. ஜப்பானின் புகழ் பெற்ற ஃபூஜி மலையின் பின்னணியில் போர்ப் பயிற்சி நடைபெறுகிறது. போர் விமானங்கள், தாக்குதல் ஹெலிகாப்டர்கள், நூற்றுக்கணக்கான பீரங்கிகள் ஆகியவற்றுடன் 2,400-க்கும் மேற்பட்ட வீரர்கள் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிகாரத்துக்கு உள்பட்ட குவாம் தீவுகளை ஏவுகணை கொண்டு தாக்குவோம் என்று வட கொரியா அண்மையில் மிரட்டியது. வட கொரியா மிரட்டியவாறே ஏவுகணையைச் செலுத்தினால் அது ஜப்பான் வான்வெளியில் பறந்து சென்றுதான் இலக்கை அடைய முடியும். இதையடுத்து, தங்களது வான் எல்லைப் பகுதியில் பறந்து செல்லும் ஏவுகணையை நடுவானிலேயே தடுத்து சுட்டு வீழ்த்தும் பேட்ரியாட் தடுப்பு ஏவுகணையை ஜப்பான் தயார் நிலையில் நிறுத்தியுள்ளது.
ஃபூஜி மலைப்பகுதியில் நடைபெற்று வரும் தீவிர போர்ப் பயிற்சிகள் தவிர, தற்போது நாட்டின் வட பகுதியில் உள்ள ஹொக்கைடோ தீவுகளில் ஜப்பான் - அமெரிக்காவின் கூட்டு ராணுவப் பயிற்சியும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com