விமானநிலைய கட்டுமானத்தில் பல கோடி ஊழல்: பாக். தணிக்கைக் குழு குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத் விமானநிலைய கட்டுமானத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதை தணிக்கைக் குழு திங்கட்கிழமை குற்றஞ்சாட்டியது.
விமானநிலைய கட்டுமானத்தில் பல கோடி ஊழல்: பாக். தணிக்கைக் குழு குற்றச்சாட்டு

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கட்டப்படும் புதிய விமானநிலையத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக அந்நாட்டு தணிக்கைக் குழு குற்றஞ்சாட்டியது.

2016-17 ஆண்டு முதல் இந்த விமானநிலையம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், இந்த கட்டுமானம் தொடர்பாக முறையான வரைபடம், கட்டுமான முறை, இதர விவரங்கள் எதுவும் சரிவர சமர்பிக்கப்படவில்லை. 

இந்த கட்டுமானம் தொடர்பான நிதி ஆதாரங்களின் விவரங்களை தாக்கல் செய்யத் தவறிவிட்டனர். இதனால் போதிய காலத்தில் உரிய நிதியை ஒதுக்குவதில் சிக்கல் நீடிக்கிறது.

கட்டுமான ஒப்பந்தம் முறையாக இல்லை. கட்டுமானத்தில் விதிமீறல் நடைபெற்றுள்ளது. திடீரென கட்டுமானத்தின் செலவீனங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ஒப்பந்த முறை சரியாக பின்பற்றப்படுவதில்லை. 

இதில், பொதுமக்களின் வரிப்பணம் பல கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது. கட்டுமானத்தின் வரவு, செலவு விவரங்கள் முறைப்படி தாக்கல் செய்யவில்லை. இதுவே ஊழல் நடைபெற்றதற்கு முக்கியச் சான்று என பாகிஸ்தான் தணிக்கைக் குழு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com