கொசுவினைக் கொன்று படம் போட்ட பயனாளரின் கணக்கினை முடக்கிய டிவிட்டர்!

தன்னைக் கடித்த கொசுவினைக் கொன்று அதன் படத்தினை டிவிட்டரில் பதிவேற்றிய பயனாளரின் கணக்கினை, டிவிட்டர் முடக்கிய சம்பவம் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.
கொசுவினைக் கொன்று படம் போட்ட பயனாளரின் கணக்கினை முடக்கிய டிவிட்டர்!

சான் பிரான்சிஸ்கோ: தன்னைக் கடித்த கொசுவினைக் கொன்று அதன் படத்தினை டிவிட்டரில் பதிவேற்றிய பயனாளரின் கணக்கினை, டிவிட்டர் முடக்கிய சம்பவம் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த டிவிட்டர் பயனாளர் ஒருவர் @nemuismywife என்ற முகவரியில் இயங்கி வந்தார். அவர் கடந்த 20-ஆம் தேதியன்று தனது வீட்டில் ஓய்வாக அமர்ந்து தொலைக்காட்சியினைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது, தன்னைக் கடித்த கொசு ஒன்றினை அடித்துக் கொன்றார். பின்னர் அதனைப் புகைப்படம் எடுத்து தனது டிவிட்டர் கணக்கில் பதிவேற்றினார். அந்தப் பதிவில் அவர், 'நான் ஓய்வாக அமர்ந்து தொலைக்காட்சியினைப் பார்த்துக் கொண்டிருகும் பொழுது, என்னைக் கடிப்பதற்காக எங்கிருந்து வந்தாய்? சாவு! (நீதான் இப்பொழுது செத்து விட்டாயே)'' என்று தெரிவித்திருந்தார்.

சிறிது நேரம் கழித்து அவருக்கு டிவிட்டரில் இருந்து தகவல் ஒன்று வந்தது. அதில் அவர் வெறுப்பு மற்றும் வன்முறையை பரப்பும் தகவலை பதிவேற்றியதால், அவருடைய கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டு விட்டதாகவும், இனி அதனை மீட்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவர் உடனே @DaydreamMatcha என்ற முகவரியில் வேறொரு டிவிட்டர் கணக்கினைத் துவக்கினார். அதில் அவர், ' நான் என்னுடைய முந்தைய கணக்கில் கொசு ஒன்றினை கொன்றதாக தகவல் தெரிவித்து பதிவு இட்டவுடன் என் கணக்கு முடக்கபட்டுள்ளது. இது ஒரு வரம்பு மீறலா?' என்று கோபமாக கேட்டிருந்தார்.

அவரது இந்த ட்வீட்டுக்கு 27000 பேர் 'லைக்; இட்டிருந்தார்கள். 31000 பேர் அதனை 'ரிட்வீட்' செய்திருந்தார்கள்.   

பொதுவாக வெறுப்பு மற்றும் வன்முறையை பரப்பும் தகவலை பகிரும் டிவிட்டர் கணக்குகள் அதன் நிர்வாகத்தால் முடக்கப்படும். இதற்கு ஒரு 'தானியங்கி வழிமுறை பின்பற்றப்படுகிறது. ஆனால் டிவிட்டரின் இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் பரவலாக விமர்சிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com