ரூ.2.47 லட்சம் கோடிக்கு அமெரிக்க ராணுவ தளவாடங்கள் விற்பனை

நடப்பு 2017ஆம் ஆண்டில் அமெரிக்கா 38,000 கோடி டாலர் (ரூ.2.47 லட்சம் கோடி) மதிப்புக்கு ராணுவ தளவாடங்களை விற்பனை செய்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை தலைமையகமான பென்டகன்

நடப்பு 2017ஆம் ஆண்டில் அமெரிக்கா 38,000 கோடி டாலர் (ரூ.2.47 லட்சம் கோடி) மதிப்புக்கு ராணுவ தளவாடங்களை விற்பனை செய்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
அமெரிக்காவின் ராணுவ தளவாட தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு உலக அளவில் எப்பொழுதுமே நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக, வெளிநாட்டு ராணுவம் மூலமான ஆயுத விற்பனையில் விறுவிறுப்பு காணப்படுகிறது. இதற்கு, வாடிக்கையாளர்களுக்கு வெறும் தளவாடங்களை மட்டும் விற்பனை செய்யாமல், அதனை இயக்குவதற்கான பயிற்சி, பராமரிப்பு பணி உள்ளிட்ட சேவைகளை தொடர்ந்து அளித்து வருவதே முக்கிய காரணம். 
கடந்த 70 ஆண்டுகளாக அமெரிக்காவின் அரசியல் மற்றும் பாதுகாப்பில் ஆயுத விற்பனை என்பது முக்கிய அம்சமாக கோலோச்சி வருகிறது. 
நடப்பு 2017ஆம் ஆண்டில் 38,000 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் விற்பனை ஆகியுள்ளது. இதில், அதிகபட்சமாக மத்திய ஆசியா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளுக்கு 2,200 கோடி டாலர் (ரூ.1.43 லட்சம் கோடி) மதிப்புக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இவற்றைத் தொடர்ந்து, இந்தோ-பசிஃபிக் நாடுகள் (796 கோடி டாலர்), ஐரோப்பா (730 கோடி டாலர்), ஆப்பிரிக்கா (24.86 கோடி டாலர்) உள்ளிட்ட நாடுகளுக்கும் அமெரிக்காவின் ஆயுதங்கள் விற்பனையாகியது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். ஒவ்வொரு நாட்டுக்கும் விற்பனை செய்யப்பட்ட ஆயுதங்களும்- அதன் மதிப்பும் குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com