1.9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சிங்க இன படிமங்கள் கண்டுபிடிப்பு

சுமார் 1.9 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த சிங்க இனத்தின் படிமங்களை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

சுமார் 1.9 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த சிங்க இனத்தின் படிமங்களை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாவது: 
குயின்ஸ்லேண்ட் மாகாணத்தில் உள்ள உலகின் மிக பாரம்பரியமிக்க ரிவெர்செலிக் பகுதியில் விஞ்ஞானிகள் தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுமார் 1.9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த "மர்சூபியல்' இன சிங்கத்தின் புதைபடிமங்கள் கண்டறியப்பட்டன. அந்த இன சிங்கத்தின் மண்டைஓடு, பற்கள் மற்றும் கால் மேற்பகுதியின் நீண்ட எலும்புகளை விஞ்ஞானிகள் சேகரித்துள்ளனர்.
சுமார் 1.8 கோடி ஆண்டுகள் முதல் 2.6 கோடி ஆண்டுகளுக்கு இடையிலான மியோசீன் காலத்தின் முற்பகுதியிலும் ஒலிகோசீன் காலத்தின் பிற்பகுதியிலும் "மர்சூபியல்' சிங்கங்கள் ஆஸ்திரேலியாவின் சில அடர்ந்த வனப்பகுதிகளில் வாழ்ந்துள்ளன. அப்போது இவை வாக்கலியோ ஸ்கூட்டனி என்ற பெயரிலும் அழைக்கப்பட்டுள்ளன.
வேட்டையாடி இறைச்சியை உண்ணும் பழக்கத்தைக் கொண்ட "மர்சூபியல்' சிங்கங்கள் நாய் போன்ற தோற்றத்தை உடையதாகவும், அதன் எடை சுமார் 23 கிலோவாகவும் இருந்துள்ளது. 
ஆனால், தற்போது கிடைத்துள்ள படிமங்கள் அந்த சிங்கங்கள் வாழ்ந்த இறுதிகாலகட்டத்தைச் சேர்ந்ததாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com