பிரிட்டன் ஏற்கவில்லை: பிரதமர் தெரசா மே

பிரிட்டன் பிரதமர் தெரசா மே வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பது: ஜெருசலேமை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்காவின் முடிவை பிரிட்டன் ஏற்கவில்லை.

பிரிட்டன் பிரதமர் தெரசா மே வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பது: ஜெருசலேமை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்காவின் முடிவை பிரிட்டன் ஏற்கவில்லை. ஜெருசலேம் நகரின் அந்தஸ்து குறித்து இறுதி தீர்மானம் எட்டப்படாமல், இது போன்ற முக்கிய முடிவு எடுப்பது சரியல்ல. அந்தப் பிராந்தியத்தில் அமைதி நிலவச் செய்வதற்கு அமெரிக்காவின் தற்போதைய அறிவிப்பு எந்த விதத்திலும் உதவப் போவதில்லை.
தற்போதைய நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பல்வேறு தீர்மானங்களில் குறிப்பிட்டிருப்பதைப் போல, கிழக்கு ஜெருசலேம் என்பது பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட இடம் என்ற நிலைப்பாட்டை பிரிட்டன் ஏற்கிறது.
ஜெருசலேமின் இறுதி அந்தஸ்து குறித்து பாலஸ்தீனும் இஸ்ரேலும் பேசி முடிவு செய்ய வேண்டும். இஸ்ரேல் - பாலஸ்தீன் நாடுகளின் கூட்டுத் தலைநகராக ஜெருசலேம் இருக்க வேண்டும். இதுவே பிரிட்டனின் அதிகாரபூர்வ நிலைப்பாடாக இருந்து வந்திருக்கிறது. அதே நிலைப்பாட்டில் இப்போதும் பிரிட்டன் உறுதியுடன் உள்ளது.
இஸ்ரேலுக்கான பிரிட்டன் தூதரகம் டெல் அவிவ் நகரிலேயே தொடரும் என்று பிரதமர் தெரசா மே தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com