இந்தியா-அமெரிக்கா இணைந்து பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை வகுக்க வேண்டும்

இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து பாதுகாப்புத் தொடர்பான முக்கியத் திட்டங்களை வகுக்க வேண்டும் என்று இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் ரிச்சர்ட் வர்மா வலியுறுத்தினார்.

இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து பாதுகாப்புத் தொடர்பான முக்கியத் திட்டங்களை வகுக்க வேண்டும் என்று இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் ரிச்சர்ட் வர்மா வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
பாதுகாப்புத் துறை வர்த்தகத்தில் இந்தியாவுக்கு கடந்த ஆண்டு பிரத்யேக இடத்தை அமெரிக்க அரசு அளித்துள்ளது. தொழில்நுட்பத்தை பகிர்ந்துகொள்வதில் அந்நாட்டுடன் நாம் நெருங்கிய நட்பு பாராட்ட வேண்டும்.
முன்னாள் அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் முடிய இருந்த காலகட்டத்தில், புதிய வகை ராணுவ வாகனங்கள், மேம்படுத்தப்பட்ட வடிவிலான புதிய வகை ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை வடிவமைக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டது. அந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
இந்தியாவுக்கு விமானம் தாங்கி போர்க் கப்பலை வடிவமைத்துத் தர வேண்டிய திட்டமும் உள்ளது. இந்தத் திட்டங்கள் அனைத்தையும் மிகப் பெரிய அளவில் செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இந்தியாவும்-அமெரிக்காவும் இணைந்து பாதுகாப்பு தொடர்பான முக்கியத் திட்டங்களை வகுக்க வேண்டும். இதன்மூலம், இருநாட்டுத் தொழில்துறை, அரசுத் துறைகள் இடையே எதிர்வரும் ஆண்டுகளில் பிணைப்பு ஏற்படும் என்றார் ரிச்சர்ட் வர்மா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com