மனைவி, தாயாரை சந்திக்க குல்பூஷண் ஜாதவுக்கு பாக். அனுமதி

பாகிஸ்தானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு, கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தன்று அவரது மனைவி, தாயாரை சந்திப்பதற்கு அந்நாட்டு
மனைவி, தாயாரை சந்திக்க குல்பூஷண் ஜாதவுக்கு பாக். அனுமதி

பாகிஸ்தானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு, கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தன்று (டிச.25) அவரது மனைவி, தாயாரை சந்திப்பதற்கு அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது.
இதுகுறித்து இஸ்லாமாபாதில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது பை ஃசல் கூறுகையில், "மனைவி, தாயாரை டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி சந்திப்பதற்கு குல்பூஷண் ஜாதவுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசின் முடிவு, இந்தியாவிடம் தெரிவிக்கப்பட்டு விட்டது. பாகிஸ்தானுக்கு வரும் குல்பூஷண் ஜாதவ் குடும்பத்தினருக்கு பாதுகாப்பை ஏற்பாடுகளை அரசு செய்து தரும்' என்றார்.
இந்தியா வரவேற்பு: பாகிஸ்தானின் இந்நடவடிக்கையை இந்தியா வரவேற்றுள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவிக்கையில், "பாகிஸ்தானுக்கு குல்பூஷணின் மனைவி மற்றும் தாயார் செல்வது குறித்து அவர்களுடன் கலந்தாலோசித்து சுற்றுப்பயணம் திட்டம் குறித்து முடிவு செய்யப்படும்' எனத் தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
குல்பூஷணின் மனைவிக்கு மட்டும் விசா அளிக்க முன்பு பாகிஸ்தான் ஒப்புக் கொண்டிருந்தது. ஆனால், இந்தியத் தரப்பில் குல்பூஷணின் தாயாருக்கும் விசா அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதையேற்று, தற்போது குல்பூஷண் ஜாதவின் மனைவி, தாயார் ஆகிய 2 பேருக்கும் விசா அளிக்க பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது. பாகிஸ்தானுக்கு அவர்கள் செல்லும்போது ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து அந்நாட்டிடம் இந்தியா கவலை எழுப்பியிருந்தது. இதைக் கேட்ட பாகிஸ்தான், அவர்கள் இருவருக்கும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படும் வாக்குறுதி அளித்துள்ளது என்று சுஷ்மா குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com