நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் துபையில் "கல்விக் கண்காட்சி-2017'

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் துபையில் நடைபெற்ற "கல்வி கண்காட்சி-2017' ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. 
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் துபையில் நடைபெற்ற கல்வி கண்காட்சியைப் பார்வையிட்ட மாணவர் மற்றும் பெற்றோர்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் துபையில் நடைபெற்ற கல்வி கண்காட்சியைப் பார்வையிட்ட மாணவர் மற்றும் பெற்றோர்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் துபையில் நடைபெற்ற "கல்வி கண்காட்சி-2017' ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. 
டிச.9 மற்றும் டிச.10 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்ற இந்த கல்விக் கண்காட்சியை எக்ஸ்பிரஸ் பப்ளிகேஷன்ஸ் துணைத் தலைவர் (சந்தைப்படுத்துதல்) ஜே.விக்னேஷ்குமார் முன்னிலையில், வழக்குரைஞரும் சட்ட ஆலோசகருமான அலி அல் ஷம்ஸி தொடங்கி வைத்தார். உலக தரத்திலான உயர் கல்வி அனைத்துக்கும் இந்தியா முக்கிய மையமாகத் திகழ்கிறது என்பதை உணர்த்துவதே இந்த கண்காட்சியின் முக்கிய இலக்கு என்று அவர்கள் தெரிவித்தனர். 
இந்த கண்காட்சியில், விஐடி, எஸ்ஆர்எம், சவீதா, ரேவா பல்கலைக்கழகங்கள், ஹிந்துஸ்தான் குழும கல்வி நிறுவனங்கள், கிரெசன்ட், டெக்னோ இந்தியா, சின்மயா விஸ்வவித்யாபீடம், காருண்யா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கொங்கு என்ஜினியரிங் கல்லூரி, எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்கள், கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டஸ்ட்ரியல் டெக்னாலஜி, சிக்ஷா ஓ அனுசந்தான், பாவை குழும பள்ளிகள், சோனா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, ஐபிஇ, கிரியேட்டிவ் அகாதெமி, கார்னர்ஸ்டோன் இன்டர்நேஷனல் காலேஜ், செயின்ட் ஜோசப் காலேஜ் ஆஃப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, எம்இஎஸ் இண்டர்நேஷனல் ஸ்கூல், டிசிஎஸ்எம்ஏடி, செயின்ட் ஜார்ஜ் காலேஜ், தானிஷ் அகமது காலேஜ் ஆஃப் என்ஜினியரிங், ராஜலட்சுமி என்ஜினியரிங் காலேஜ், கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி உள்ளிட்ட முன்னணி கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன. 
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த கல்வி கண்காட்சியின் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயனடைந்தனர். 
கல்விக் கண்காட்சியில் கலந்து கொண்ட விஐடி பல்கலையின் இணை பேராசிரியர் விவேகானந்தன் தெரிவித்தது: இந்த கல்வி கண்காட்சியில் பங்கேற்றது மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது. எங்களின் கல்வி நிறுவன படிப்புகளுக்கு மாணவர் மற்றும் பெற்றோரிடையே அதிக வரவேற்பு காணப்பட்டது. அடுத்த கல்வியாண்டில் சேருவதற்கு இப்போதே மாணவர்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்துள்ளனர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com