வரும் ஆண்டு முதல் சவூதி அரேபியாவில் திரையரங்கங்கள் துவங்க அனுமதி! 

வரும் ஆண்டு முதல் சவூதி அரேபியாவில் திரையரங்கங்கள் துவங்க அனுமதி அளிக்கப்பட உள்ளதாக அந்நாட்டின் செய்தி மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வரும் ஆண்டு முதல் சவூதி அரேபியாவில் திரையரங்கங்கள் துவங்க அனுமதி! 

ரியாத்: வரும் ஆண்டு முதல் சவூதி அரேபியாவில் திரையரங்கங்கள் துவங்க அனுமதி அளிக்கப்பட உள்ளதாக அந்நாட்டின் செய்தி மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டின் செய்தி மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் அவாத் பின் சலேத் அலாவத் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளதாவது:

கலாச்சாரத்துறை ஒழுங்குமுறை அமைப்பான ஒலி-ஒளி ஊடங்களுக்கான பொது அமைப்பு இதற்கான ஆரம்ப கட்ட வேலைகளைத் துவக்கியுள்ளது. நாட்டின் முதல் திரை அரங்கமானது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கிறோம். 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த நடவடிக்கைகள் எல்லாம் 2030-ஆம் ஆண்டினை மனதினில் கொன்டு சவூதி அரசால் தீட்டப்பட்டுள்ள பொருளாதார திட்டங்களின் ஒரு பகுதியாகும். இதன் மூலம் ஒவ்வொரு வருடமும் சவூதி நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு பல்வேறு விதமான பொழுதுபோக்கு அம்சங்களுக்காக செலவு செய்யும் 20 பில்லியன் டாலரை மிச்சப்படுத்தும் எண்ணமும் அந்நாட்டுக்கு உள்ளது   

தீவிர இஸ்லாமிய சட்டங்களை பின்பற்றும் நாடான சவூதி சமீப காலமாக தனது முகத்தினைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டு வருகிறது. அதற்கு ஏற்றவாறு அங்கு சமீப காலமாக அரங்க இசை நிகழ்ச்சிகள், பாப் இசை திருவிழா கொண்டாட்டங்கள், வெகுவான பொதுமக்கள் பங்களிப்பை உள்ளடக்கிய தேசிய நாள் கொண்டாட்டம் உள்ளிட்டவைகள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com