இஸ்ரேல் மீது ஹமாஸ் மீண்டும் தாக்குதல்

காஸாவிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணை வீச்சு நடைபெற்றதைத் தொடர்ந்து, இஸ்ரேல் போர் விமானங்களும் பீரங்கிகளும் திங்கள்கிழமை இரவு பதிலடித் தாக்குதல் நடத்தின.

காஸாவிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணை வீச்சு நடைபெற்றதைத் தொடர்ந்து, இஸ்ரேல் போர் விமானங்களும் பீரங்கிகளும் திங்கள்கிழமை இரவு பதிலடித் தாக்குதல் நடத்தின.
இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜானதன் கார்னிகஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
திங்கள்கிழமை இரவு காஸா பகுதியிலிருந்து ஏவுகணை வீசப்பட்டது. அதைத் தொடர்ந்து, காஸாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத நிலைகளை நோக்கி இஸ்ரேல் ராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், காஸா பகுதியிலிருந்து மீண்டும் ஏவுகணை வீசப்பட்டது. இஸ்ரேல் ராணுவத்தினர் அதனை நடுவானிலேயே சுட்டு வீழ்த்தினர். பின்னர், ஹமாஸ் பயங்கரவாத நிலைகள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் வான்வழித் தாக்குதல் நடத்தின என்றார் அவர்.
காஸா பகுதியிலிருந்து நடத்தப்படும் தாக்குதல்களை பயங்கரவாதத் தாக்குதல்களாக இஸ்ரேல் குறிப்பிட்டு வருகிறது.
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் முடிவை கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, இஸ்ரேல் -ஹமாஸ் புதிய மோதல் வெடித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் மீது காஸா பகுதியிலிருந்து முதலில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில் ஹமாஸ் ராணுவ நிலைகளும் ஆயுத கிடங்கும் அழிக்கப்பட்டதுடன், காஸா தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த இருவர் பலியாகினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com