சீனாவில் 2025 முதல் பெட்ரோல் வாகன விற்பனை நிறுத்தம்

சீனாவைச் சேர்ந்த பெய்ஜிங் ஆட்டோமோட்டிவ் குழுமம் வரும் 2025ஆம் ஆண்டு முதல் பெட்ரோல் வாகன விற்பனையை முற்றிலும் நிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. 

சீனாவைச் சேர்ந்த பெய்ஜிங் ஆட்டோமோட்டிவ் குழுமம் வரும் 2025ஆம் ஆண்டு முதல் பெட்ரோல் வாகன விற்பனையை முற்றிலும் நிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து அந்த குழுமத்தின் தலைவர் ஜியூ ஹெய் கூறியது:
வரும் 2020ஆம் ஆண்டுக்குள் பெய்ஜிங்கிலிருந்தும், 2025ஆம் ஆண்டுக்குள் சீனா முழுவதும், பெட்ரோல்-டீசலில் இயங்கும் வாகன விற்பனையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு சீனாவுக்கு மட்டுமே பொருந்தும். இந்த முடிவால், தென்கொரியாவின் ஹுண்டாய், ஜெர்மனியின் டெய்ம்லர் நிறுவனங்களுடன் பங்குதாரராக இணைந்து வாகனங்களை தயாரிப்பதில் பெய்ஜிங் குழுமத்துக்கு எந்த தடையும் இருக்காது என்றார் அவர்.
சீனாவில் பல நகரங்களில் காற்று மாசு பாடு உச்சகட்டத்தை எட்டியுள்ளது.இதனால், அந்நாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்கள் பெட்ரோல்-டீச ல் பயன்பாட்டு வாகனங்களின் உற்பத்தியை நிறுத்தப்போவதாக அறிவித்து வருகின்றன. மாறாக அவை மின்சார கார் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளன.
பெட்ரோல்-டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு 2018ஆம் ஆண்டு முதல் கட்டுப்பாடுகளை விதிக்க பெய்ஜிங் திட்டமிட்டிருந்த நிலையில், ஜெர்மனி மற்றும் இன்னும் சில வெளிநாட்டு நிறுவனங்கள் கவலை தெரிவித்ததையடுத்து அந்த முடிவை ஒத்திப்போட்டது. 
ஆனால், தற்போது சீனாவின் உணர்வினை நன்கு புரிந்து கொண்ட வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவில் அமைத்துள்ள ஆலைகளில் மின்சார கார்கள் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com