ஜப்பான் புல்லட் ரயிலில் விரிசல்: 1,000 பயணிகள் உயிர் தப்பினர்

ஜப்பானின் அதிவேக "புல்லட்' ரயிலில் ஆபத்தான விரிசல் ஏற்பட்டிருந்து தகுந்த நேரத்தில் கண்டறியப்பட்டதால், அதில் பயணம் செய்த சுமார் 1,000 பேர் உயிர் தப்பினர்.

ஜப்பானின் அதிவேக "புல்லட்' ரயிலில் ஆபத்தான விரிசல் ஏற்பட்டிருந்து தகுந்த நேரத்தில் கண்டறியப்பட்டதால், அதில் பயணம் செய்த சுமார் 1,000 பேர் உயிர் தப்பினர்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: தெற்கு ஜப்பானினைச் சேர்ந்த ஒரு ரயில் நிலையத்திலிருந்து, "புல்லட்' ரயில் ஒன்று திங்கள்கிழமை புறப்பட்டது. எனினும், நடுவழியில் தீயும் வாடையும், வித்தியாசமான இரைச்சலும் ரயிலில் இருந்து எழுந்தது.
அதையடுத்து, மத்திய ஜப்பானின் நகோயா ரயில் நிலையத்தில் அந்த ரயில் நிறுத்தப்பட்டு, பரிசோதிக்கப்பட்டது. அப்போது, அந்த ஒரு பெட்டியின் அடிப்பகுதியில் ஏற்பட்ட விரிசல் காரணமாக அந்த இரைச்சலும், தீயும் வாடையும் வந்தது கண்டறியப்பட்டது.
அந்த விரிசலுடன் தொடர்ந்து அந்த "புல்லட்' ரயில் இயக்கப்பட்டிருந்தால், அதிவேகமாகச் சென்று கொண்டிருக்கும்போது ரயில் தடம் புரண்டு பயங்கர விபத்து நேரிட்டிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தகுந்த நேரத்தில் அந்த விரிசல் கண்டறியப்பட்டதால் அந்த ரயிலில் பயணித்த 1,000 பேர் காயமின்றி தப்பியதாக அவர்கள் கூறினர்.
ஜப்பானின் நீண்ட கால "புல்லட்' ரயில் வரலாற்றில், இத்தகைய விரிசல் கண்டறியப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com