பாகிஸ்தான் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதல்: 9 பேர் பலி

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 9 பேர் பலியாகினர்.
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சைக்குக் கொண்டு செல்லப்படும் பெண்.
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சைக்குக் கொண்டு செல்லப்படும் பெண்.

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 9 பேர் பலியாகினர்.
பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத் தலைநகரில் உள்ள பெத்தெல் மெமோரியல் தேவாலயத்தில் பிற்பகல் வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இரு பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலை நிகழ்த்தியதாக மாகாண உள்துறை அமைச்சர் மீர் சர்ஃபராஸ் புக்தி கூறினார். அவர் மேலும் தெரிவித்தது:
குவெட்டா நகரின் ஜர்கூன் சாலையில் உள்ள பெத்தெல் மெமோரியல் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு சுமார் 400 பேர் இருந்தனர். அப்போது சந்தேகத்துக்குரிய இருவர் தேவாலயத்துக்குள் நுழைய முற்பட்டனர். அவர்களைக் காவலர்கள் தடுத்து நிறுத்தியபோது ஒரு நபர் துப்பாக்கியால் சுட்டார். போலீஸார் திருப்பி சுட்டதில் அந்த நபர் உயிரிழந்தார். இதனிடையே மற்றொரு நபர் தேவாலயத்துக்குள் ஓடி, தனது உடலில் பொருத்தியிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். 
இந்தத் தற்கொலை குண்டு வெடிப்பில் 9 பேர் பலியாகினர். மேலும் 44 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பலர் பெண்கள், சிறுவர்கள் ஆவர். இதில் 9 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றார் அவர்.
இந்த பயங்கரவாத சம்பவத்துக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் அஹ்ஸான் இக்பால் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இது தொடர்பாக மாகாண காவல் துறை தலைவர் முவாஸம் அன்சாரி கூறியது:
தாக்குதல் நடத்திய நபர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. தேவாலயத்தில் இருந்தவர்களைப் பிணைக் கைதிகளாக வைத்துப் பெரும் தாக்குதலை நிகழ்த்தி, ஏராளமான உயிரிழப்பை ஏற்படுத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டதாகத் தெரிகிறது.
மூன்று அல்லது அதற்கும் மேற்பட்டோர் இந்தத் தாக்குதலை நடத்த வந்ததாகவும், வாயிற்புறத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையைத் தொடர்ந்து ஓரிருவர் அந்த இடத்தைவிட்டுத் தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது.
இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை. எனினும் இதுபோன்ற பல தாக்குதல்களை தலிபான் பயங்கரவாதிகள் முன்பு பல முறை நடத்தியிருப்பதால் அவர்கள் இதன் பின்னணியில் இருக்கலாம் என்று கூறினார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் அதில் கலந்து கொள்ள ஏராளமான சிறுவர்களும் அவர்களின் பெற்றோரும் வந்திருந்தனர். இதே பெத்தெல் மெமோரியல் தேவாலயம் இதற்கு முன்பும் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
கடந்த 2015 மார்ச்சில் லாகூரின் யோகனாபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள இரு தேவாலயங்களில் தலிபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 15 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com