வெள்ளை மாளிகையில் 2 நூற்றாண்டுகள் பழமையான மரம் அகற்றம்

வெள்ளை மாளிகையில் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக உள்ள மரத்தை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையில் 2 நூற்றாண்டுகள் பழமையான மரம் அகற்றம்

அமெரிக்காவின் தலைமையகமான வெள்ளை மாளிகையில் சுமார் இரண்டு நூற்றாண்டுகளாக அமைந்துள்ள மரம் தற்போது அகற்றப்படவுள்ளது.

வெள்ளை மாளிகையின் தெற்குப் பகுதியில் மக்னோலியா வகை மரம் ஒன்று உள்ளது. இது அங்கு சுமார் இரண்டு நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. 

இந்நிலையில், இவ்வார இறுதிக்குள் இம்மரத்தை அகற்ற அதிபர் டொனால்டு டிரம்ப் மனைவி அனுமதி அளித்துள்ளார். இந்த மரம் மிகுந்த சேதமடைந்து உள்ளது. இதனால் செயற்கை முறையில் தற்போது இந்த மரம் அங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.

மேலும், வெள்ளை மாளிகை வரும் பார்வையாளர்களும், பத்திரிகையாளர்களும் இந்த மரத்தின் அருகில் ஓய்வெடுத்து வருகின்றனர். இது அவர்களுக்கு ஆபத்தான சூழலை ஏற்படுத்தி வருகிறது.

அந்த மரத்தின் ஒவ்வொரு கிளைகளாக உதிர்ந்து வருகிறது. அதன் ஆயுள் நிறைவடையும் தருவாயில் இருப்பது தொடர்பாக வெள்ளை மாளிகை பராமரிப்பு தரப்பில் அதிபர் டொனால்டு டிரம்ப் மனைவியிடம் ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டது.

எனவே இதன் அடிப்படையில் இந்த மரத்தை உடனடியாக அகற்றுமாறும், அதே வகையிலான மரக்கன்று ஒன்றை அவ்விடத்தில் மீண்டும் நடுவதற்கு அதிகாரிகளுக்கு திருமதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். 

மேலும், இந்த மரத்தின் மீதம் பாதுகாக்கப்படும் என்றும் டொனால்டு டிரம்ப் மனைவி கூறியிருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஸ்டெபனி க்ரிஷாம் தெரிவித்துள்ளார்.

இந்த மரம் முன்னாள் அமெரிக்க அதிபர் ஆண்ட்ரூ ஜாக்ஸனால் அவரது மனைவி ராசேல் நினைவாக நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com