லிபியா கடல் பகுதியில் 74 அகதிகள் பலி

லிபியாவையொட்டிய மத்தியதரைக் கடல் பகுதியில் படகுகளில் ஏற்பட்ட படகு விபத்தில் உயிரிழந்த 74 அகதிகளின் சடலங்கள் செவ்வாய்க்கிழமை கரையொதுங்கின.
லிபியாவின் அல்-ஜாவியா கடலோராக கிராமத்தில் செவ்வாய்க்கிழமை கரையொதுங்கிய 74 அகதிகளின் சடலங்களை மீட்கும் செம்பிறைச் சங்கத்தினர்.
லிபியாவின் அல்-ஜாவியா கடலோராக கிராமத்தில் செவ்வாய்க்கிழமை கரையொதுங்கிய 74 அகதிகளின் சடலங்களை மீட்கும் செம்பிறைச் சங்கத்தினர்.

லிபியாவையொட்டிய மத்தியதரைக் கடல் பகுதியில் படகுகளில் ஏற்பட்ட படகு விபத்தில் உயிரிழந்த 74 அகதிகளின் சடலங்கள் செவ்வாய்க்கிழமை கரையொதுங்கின.
இந்த நிலையில், நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 630 அகதிகளை இத்தாலிய கடலோரக் காவல் படையினர் மீட்டதாக செம்பிறைச் சங்கம் தெரிவித்தது.
போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து, லிபியா வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு அடைக்கலம் தேடி அண்மைக் காலமாக ஆயிரக்கணக்கானோர் மத்தியதரைக் கடல் வழியாக ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.
கடத்தல்காரர்களால் சட்டவிரோதமான முறையில் மோசமான படகுகளில் அழைத்துவரப்படும் அவர்கள், நடுக்கடலில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்தச் சூழலில், லிபியா வழியாக ஐரோப்பா நோக்கிச் செல்லும்போது, நடுக்கடலில் ஏற்பட்ட படகு விபத்து காரணமாக மூழ்கி உயிரிழந்த 74 அகதிகளின் சடலங்கள் லிபியாவின் அல்-ஜாவியா கடலோர கிராமத்தில் வியாழக்கிழமை கரையொதுங்கின.
இந்த நிலையில், மத்தியதரைக் கடல் பகுதியில் இரு படகுகளில் தத்தளித்துக் கொண்டிருந்த சுமார் 630 அகதிகளை மீட்டதாக இத்தாலியக் கடலோரக் காவல் படையினர் புதன்கிழமை தெரிவித்தனர்.
அவர்கள் சென்ற பெரிய மரப் படகும், ரப்பர் படகும் நடுக்கடலில் பழுதாகி தத்தளித்துக் கொண்டிருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இத்தாலியிலிருந்து வெறும் 300 கி.மீ. தொலைவிலுள்ள லிபியாவிலிருந்து ஐரோப்பாவை நோக்கி பயணிக்கும் அகதிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு வேகமாக அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது.
செவ்வாய்க்கிழமை கரையொதுங்கிய 74 அகதிகளுடன், இந்த ஆண்டு மட்டும் கடல் பயணத்தின்போது உயிரிழந்த அகதிகளின் எண்ணிக்கை 365-ஐத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com