சீனாவில் மிக நீண்ட தூரத்துக்கு புல்லட் ரயில் சேவை தொடக்கம்

சீனாவின் குன்மிங் நகரிலிருந்து அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங் வரை 2,760 கி.மீ. தொலைவுக்கு புல்லட் ரயில் சேவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
சீனாவில் மிக நீண்ட தூரத்துக்கு புல்லட் ரயில் சேவை தொடக்கம்

சீனாவின் குன்மிங் நகரிலிருந்து அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங் வரை 2,760 கி.மீ. தொலைவுக்கு புல்லட் ரயில் சேவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
உலகின் மிக நீண்ட தூரத்துக்கு செல்லும் புல்லட் ரயில் குன்மிங் நகரிலிருந்து வியாழக்கிழமை காலை 11.05 மணியளவில் புறப்பட்டது. இந்த ரயில் பெய்ஜிங் நகரை அடைய 13 மணி நேரம் ஆகும்.
இந்த ரயிலுக்கு உலகப் புகழ்பெற்றதும் சீனாவின் யுன்னன் மாகாணத்தில் உள்ள ஷங்ரி-லா என்ற ரிசார்ட்டின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பிரிட்டன் நாவலாசிரியர் தான் எழுதிய "லாஸ்ட் ஹாரிஸான்' என்ற புத்தகத்தில் இந்தப் பெயரை முதன்முதலில் பயன்படுத்தினார்.
இந்த புல்லட் ரயிலின் இரண்டாம் வகுப்புக் கட்டணம் 1,147 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.11,227) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் செல்லும் பாதையும் மிக நீண்ட தூரத்துக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் கிழக்கு-மேற்கு ரயில்வேயை இணைக்கும் வகையில் சுமார் 20,000 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பாதையின் அளவு 2030-ஆம் ஆண்டில் 45ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு நீட்டிக்கவும் சீன அரசு திட்டமிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com