குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த சரக்கு விமானம்: கிர்கிஸ்தானில் 32 பேர் பலி!

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் சரக்கு விமானம் ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த விபத்தில் 37 பேர் பலியானார்கள்.
குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த சரக்கு விமானம்: கிர்கிஸ்தானில் 32 பேர் பலி!

பிஷ்கேக்: கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் சரக்கு விமானம் ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த விபத்தில் 37 பேர் பலியானார்கள்.

துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சரக்கு விமானம் ஒன்று இஸ்தான்புலில் இருந்து ஹாங்காங்கிற்கு சென்று கொண்டிருந்தது. வழியில் பிஷ்கேக் விமான நிலையத்தில் அந்த விமானம் இன்று காலை  தரையிறங்கிய போது இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது

மக்கள் நெருக்கம் நிறைந்த பிஷ்கேக் நகரில் இன்று கடும் பனிமூட்டம் இன்று நிலவியது. இந்த பனிமூட்டத்துக்கு இடையே தரையிறங்க முயன்ற பொழுதுதான் விமானம் தவறுதலாக குடியிருப்பு பகுதிக்குள் விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று நம்பப்ப்டுகிறது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 32 பேர் பலியாகினர். அவர்களில் 4 விமான பைலட்களும் அடங்குவர் என்பதுகுறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அங்கே மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com