தீ விபத்தை தொடர்ந்து இடிந்து விழுந்த கட்டடம் ஈரானில் 30 தீயணைப்பு வீரர்கள் பலி

ஈரானில் 17 மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து அந்தக் கட்டடம் இடிந்து விழுந்து தீயணைப்பு வீரர்கள் 30 பேர் உயிரிழந்தனர்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் தீவிபத்துக்கு உள்ளான அடுக்கு மாடிக் கட்டடம்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் தீவிபத்துக்கு உள்ளான அடுக்கு மாடிக் கட்டடம்.

ஈரானில் 17 மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து அந்தக் கட்டடம் இடிந்து விழுந்து தீயணைப்பு வீரர்கள் 30 பேர் உயிரிழந்தனர்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வியாழக்கிழமை இந்த தீ விபத்து நிகழ்ந்தது. "பிளாஸ்கோ' என்று அறியப்பட்ட அந்தக் கட்டடம் 1960-களில் கட்டப்பட்டது. குடியிருப்புகள், அலுவலகங்கள், கடைகள் ஆகியவை அதில் இருந்தன.
உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு அந்தக் கட்டடத்தில் தீ பிடித்ததாகத் தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்தனர். அப்போது கட்டடத்திலிருந்த அனைவரும் வெளியேறிவிட்டனர். இருந்தாலும் ஒரு சிலர் அந்தக் கட்டடத்தில் இருந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
பல மணி நேரம் போராடியும் தீயை முழுவதுமாக அணைக்க முடியவில்லை. இந்நிலையில், அந்தக் கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இதையடுத்து, தீயணைப்பு வாகனங்களில் நின்று கொண்டு நீரைப் பாய்ச்சிக் கொண்டிருந்த சுமார் 30 வீரர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்ததாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் 38 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பதினேழு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தபோது அதில் பொதுமக்கள் யாரும் இருக்கவில்லை என்று கூறப்பட்டபோதிலும், உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களில் பொதுமக்கள் எத்தனை பேர், தீயணைப்பு வீரர்கள் எத்தனை பேர் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. இடிபாடுகளை அகற்றிய பின்னரே, உயிரிழந்தவர்கள் குறித்து சரியான விவரங்கள் தெரிய வரும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

தீ விபத்தைத் தொடர்ந்து,
முற்றிலுமாக இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கியவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்ட மீட்புப் படையினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com