தற்கொலைத் தாக்குதலில் 5 துருக்கி ராணுவ வீரர்கள் பலி

துருக்கி ராணுவ முகாமில் குர்திஸ்தான் உழைப்பாளர் கட்சியினர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

துருக்கி ராணுவ முகாமில் குர்திஸ்தான் உழைப்பாளர் கட்சியினர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பலியாகினர்.
அந்த நாட்டின் அக்ரி மாகாணம், தொகுபயாசித் மாவட்டத்தில் இந்த தாக்குதல் வெள்ளிக்கிழமை காலையில் நிகழ்த்தப்பட்டது.
ஏராளமான வெடிபொருள்கள் நிரப்பிய டிராக்டரை வேகமாக ஓட்டி வந்த நபர், ராணுவ முகாமுக்குள் நுழைந்து மோதச் செய்தார். இந்தத் தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 20 வீரர்கள் காயமடைந்தனர்.
தீவிரவாத அமைப்பாக துருக்கி அரசு அறிவித்துள்ள குர்திஸ்தான் உழைப்பாளர் கட்சியினருக்கு (பி.கே.கே.) எதிராக அந்நாட்டுப் போர் விமானங்கள் கடந்த பல மாதங்களாக வான்வழித் தாக்குதல் நிகழ்த்தி வருகின்றன.
அதில் இதுவரை சுமார் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக துருக்கி அரசு கூறி வருகிறது.
ஆனால் விமானப் படையின் குண்டு வீச்சில் குர்து பழங்குடியினத்தைச் சேர்ந்த அப்பாவிப் பொதுமக்களும் உயிரிழந்தனர் என பி.கே.கே. குற்றம் சாட்டி வருகிறது. இதைக் காரணம் காட்டி, துருக்கியின் ராணுவ நிலைகள், காவல் துறை முகாம்களுக்கு எதிராகப் பழி வாங்கும் தாக்குதல்களை அவ்வப்போது பி.கே.கே. நிகழ்த்தி வருகிறது.
இந்த நிலையில், ராணுவ முகாமில் பி.கே.கே. நிகழ்த்தியுள்ள தற்கொலைத் தாக்குதலில் 5 வீரர்கள் பலியாகினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com