சட்டத்திற்கும் பாசத்திற்கும் நடுவில் ஊசலாடும் சார்லி:  ஒரு 11 மாதக் குழந்தையின் உயிர் போராட்டம்!

சட்டப்புத்தங்களின் வரிகளுக்கு நடுவிலும், பெற்றோரின் தணியாத முயற்சிகளுக்கு இடையிலும் ஒரு 11 மாதக் குழநதையின் உயிர் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் சம்பவம் மனதை நெகிழச் செய்வதாக  உள்ளது.
சட்டத்திற்கும் பாசத்திற்கும் நடுவில் ஊசலாடும் சார்லி:  ஒரு 11 மாதக் குழந்தையின் உயிர் போராட்டம்!

லண்டன்: சட்டப்புத்தங்களின் வரிகளுக்கு நடுவிலும், பெற்றோரின் தணியாத முயற்சிகளுக்கு இடையிலும் ஒரு 11 மாதக் குழநதையின் உயிர் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் சம்பவம் மனதை நெகிழச் செய்வதாக  உள்ளது.

இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் வசிப்பவர்கள் கிரிஸ் கார்ட் மற்றும் கோனி யேட்ஸ் தம்பதியர். இவர்களுக்கு சார்லி என்னும் 11 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த குழநதைக்கு மிகவும் அரிதான 'மைட்டோகாண்ட்ரியல் டிபிலேஷன் சின் ட்ரோம்' என்னும் அரிதான மரபியல் நோய் உள்ளது. இதன்  காரணமாக சார்லிக்கு மூளைச் சிதைவு உண்டாகியுள்ளது. அதன் விளைவாக இயலாபாக மூச்சு விடுவதில் சிரமம் உள்ளது. எத்தனை நாட்கள இந்த நிலை நீட்டிக்கும் என்று தெரியாத நிலை!

லண்டனில் உள்ள கிரேட் ஆர்மாண்ட் மருத்துவமனையில் சார்லிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆகும் செலவை 'கிரவுட் பண்டிங்' முறையில்  கிறிஸ் தம்பதியினர் திரட்டி செலவு செய்து வருகின்றனர். 

தற்பொழுது சார்லியின் உடல் நிலைக்காக ஏதேனும் சிகிச்சைகள் உள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து வந்த கிறிஸ தம்பதியர், அமெரிக்காவில் இந்த வகை நோய்க்கு ஒரு சோதனை முறை சிகிச்சை அளிக்கப்படுவதை கண்டறிந்தனர். உடனேயே அதற்காக சார்லியை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லவும் தயாராகினர்.

ஆனால் கிரேட் ஆர்மாண்ட் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், அந்த குறிப்பிட்ட சிகிச்சை முறையின் காரணமாக சார்லிக்கு எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படாது என்றும், மேலும் கடுமையான மரணம் மட்டும் வலியினையும் உண்டாக்கும் என்று கருத்து தெரிவித்து, சார்லியை அழைத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர்.

இங்கிலாந்து நாட்டு சட்ட விதிகளின்படி, கடுமையாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சையில் இருப்பவருக்கு வழங்கப்படும் சிகிச்சை தொடர்பாக, மருத்துவர்களுக்கும் நோயாளியின் பெற்றோருக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டானால் நீதிமன்றங்கள் தலையியிடலாம். அப்பொழுதும் சிகிச்சை மற்றும் உயிர் வாழ்தல் தொடர்பாக நோயாளியின் உரிமையே பிரதானம் தவிர, பெற்றோரின் உரிமை பிரதானம் கிடையாது.

இதன் காரணமாக சார்லியை சிகிச்சைக்காக அமெரிக்க அழைத்து செல்வது தொடர்பாக கிறிஸ் தம்பதியினர் இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் தொடர்ந்து இரண்டு முறை கிறிஸ் தம்பதிகள் வழக்கில் தோல்வி அடைந்தனர். மூன்றாவதாக இங்கிலாந்து உச்சநீதி மன்றமும் கிறிஸ் தம்பதிகள் மனுவினை சமீபத்தில் தள்ளுபடி செய்து விட்டது.

பின்னர் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் கிறிஸ் தம்பதிகள் முறையிட முயன்ற பொழுதும், அங்கும் அவர்களது வழக்கு ஏற்றுக் கொள்ளப்படவே இல்லை. இந்நிலையில் இந்த விவகாரம் உலகளாவிய கவனம் பெற்றது. இது தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள, சார்லி பெயரில் ஒரு தனி இணையதளமே தொடங்கப்பட்டது. 'கிரௌட் பண்டிங்' முறையில் தற்பொழுது வரை இந்திய மதிப்பில் ரூ.பத்து கோடிக்கு மேல் திரட்டப்பட்டுள்ளது.  

இதன் வாயிலாக விபரம் அறிந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், குழந்தை சார்லிக்கு உதவி செய்வதற்கு தாம் தயாராக உள்ளதாகவும், அதற்காக மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்திருந்தார். அத்துடன் போப்பாண்டவரும் கூட இந்த விவகாரத்தில் குழந்தையின் உயிர் காப்பது தொடர்பான பெற்றோரின் உரிமைகள் கடைசி வரை மதிக்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வரை சார்லியின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று கிரேட் ஆர்மாண்ட் மருத்துவமனை அறிவித்துள்ளது. எனவே சார்லிக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் நிறுத்தப்படும் வரை, அவன் கூடவே இருப்பது என்று முடிவு செய்து பெற்றோர்கள் மருத்துவமனையில் அவன் அருகில்  காத்திருக்கின்றனர்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com