மெக்ஸிகோவில் துப்பாக்கிச் சூடு: 15 பேர் பலி

மெக்ஸிகோவில் போதை மருந்துக் கடத்தல் கும்பலுக்கும் போலீஸாருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 15 பேர் உயிரிழந்தனர்.

மெக்ஸிகோவில் போதை மருந்துக் கடத்தல் கும்பலுக்கும் போலீஸாருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 15 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
வடக்கு மெக்ஸிகோவின் லாஸ் வராஸ் நகரில் போதை மருந்து கடத்தலில் ஈடுபடும் இரண்டு கும்பல்களுக்கிடையே புதன்கிழமை கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அப்போது தகவலறிந்து அங்கு வந்த போலீஸாரை நோக்கி அந்த கும்பல் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதையடுத்து, போலீஸார் அதிரடித் தாக்குதல் நிகழ்த்தினர்.
இதில், 15 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் போதை மருந்து கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள். மேலும், அந்த கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மெக்ஸிகோவில் லாஸ் வராஸ் பகுதியில் அதிக அளவில் போதை மருந்து கடத்தல் கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. அமெரிக்க எல்லையை ஒட்டியுள்ள பகுதி என்பதால் அங்கிருந்து அமெரிக்காவுக்கு போதை மருந்து கடத்தும் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. போட்டி காரணமாக , கடத்தல் கும்பல்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com