காஷ்மீர் விவகாரத்தில் முக்கியப் பங்காற்ற சீனா ஆர்வம்

காஷ்மீர் விவகாரத்தில் முக்கியப் பங்காற்றி, இந்தியா- பாகிஸ்தான் உறவை மேம்படுத்த ஆர்வத்துடன் இருப்பதாக சீனா கூறியுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் முக்கியப் பங்காற்றி, இந்தியா- பாகிஸ்தான் உறவை மேம்படுத்த ஆர்வத்துடன் இருப்பதாக சீனா கூறியுள்ளது.
சிக்கிம் மாநிலம் டோகா லா பகுதி குறித்து இந்தியா- சீனா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ள சூழலில் இந்தியாவுக்கு எதிராக காஷ்மீர் விவகாரத்தை சீனா கையிலெடுத்துள்ளது.
பெய்ஜிங்கில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஜிங் சுவாங் கூறியதாவது:
காஷ்மீர் எல்லையில் இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெற்று வரும் மோதல்களால் அந்த இருநாடுகளின் அமைதி, ஸ்திரத்தன்மைக்கு மட்டும் பிரச்னை ஏற்படவில்லை.
ஆசிய பிராந்தியத்தின் அமைதிக்கும் பிரச்னை ஏற்படுகிறது. அந்த இருநாடுகளும் அமைதியை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். இருநாடுகள் இடையே உறவை மேம்படுத்தவும், காஷ்மீர் விவகாரத்தில் முக்கியப் பங்காற்றவும் சீனா ஆர்வத்துடன் உள்ளது என்றார் அவர்.
இந்தியா- சீனா இடையே சிக்கிமை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள எல்லைப் பிரச்னையை, முன்பு எழுந்த எல்லைப் பிரச்னைகளைப் போல பேசித் தீர்க்கலாம் என்பது போன்ற கருத்தை இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளாரே? என்ற கேள்விக்கு, 'இந்தியா- சீனா இடையே முன்பு எழுந்த எல்லைப் பிரச்னைகளில் இருந்து, இப்போதைய பிரச்னை முற்றிலும் வேறுபட்டுள்ளது.
முன்பு சரியாக வரையறுக்கப்பட்டாத எல்லையில் பிரச்னை எழுந்தது. எனவே அப்போது பேச்சு நடத்தப்பட்டது.
ஆனால் இப்போது இருதரப்பும் எல்லையாக ஒப்புக் கொண்ட பகுதிக்குள் இந்திய ராணுவம் ஊடுருவியுள்ளது குறித்து சீனா பலமுறை எச்சரிக்கை விடுத்துவிட்டது.
சிக்கிம் பகுதிக்கு சிறப்பான வரலாற்றுப் பின்னணி உண்டு. அப்பகுதியில் இந்தியா- சீனா இடையே தெளிவான எல்லை வகுக்கப்பட்டுள்ளது.
எனவே, அப்பகுதியில் இருந்து ராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டுமென்று இந்தியாவை மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com