அணு ஆயுதங்களை மேம்படுத்துகிறது இந்தியா: அமெரிக்க அணுவியல் நிபுணர்கள்

சீனாவுடன் மோதல் போக்கு உருவாகியுள்ளதைக் கருத்தில் கொண்டு அணு ஆயுதங்களை இந்தியா நவீனப்படுத்தி வருகிறது என்று அமெரிக்காவைச் சேர்ந்த அணுவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சீனாவுடன் மோதல் போக்கு உருவாகியுள்ளதைக் கருத்தில் கொண்டு அணு ஆயுதங்களை இந்தியா நவீனப்படுத்தி வருகிறது என்று அமெரிக்காவைச் சேர்ந்த அணுவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் "ஆஃப்டர் மிட்நைட்' பத்திரிகையின் ஜூலை-ஆகஸ்ட் மாத இதழில் "இந்தியா அணு சக்தி 2017' என்ற தலைப்பில் எம்.கிரிஸ்டன்சன், ராபர்ட் எஸ் நாரிஸ் ஆகிய 2 அணுவியல் நிபுணர்கள் எழுதியுள்ள கட்டுரையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கட்டுரையில் மேலும் இடம்பெற்றுள்ள சில தகவல்கள் பின்வருமாறு:
தென்னிந்தியாவில் இருந்து சீனா முழுவதையும் குறிவைத்து தாக்குவதற்கான ஏவுகணையை இந்தியா தற்போது மேம்படுத்தி வருகிறது. சுமார் 150-இல் இருந்து 200 அணு ஆயுதங்கள் வரை தயாரிக்க 600 கிலோ புளூட்டோனியத்தைத் தயாரிக்க இந்தியா திட்டமிட்டது. ஆனால், 120-முதல் 130 அணு ஆயுதங்கள் வரை தயாரிக்கக் கூடிய புளூட்டோனியத்தையே அந்நாட்டால் தயாரிக்க முடிந்தது.
வழக்கமாக பாகிஸ்தானைக் கருத்தில் கொண்டே இந்தியா அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடும். ஆனால், தற்போது, சீனாவைக் கருத்தில் கொண்டு அந்நாடு செயல்பட்டு வருகிறது என்று அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com