73 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது ரஷியா!

ரஷியா 73 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி அவற்றின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது.

ரஷியா 73 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி அவற்றின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இதுகுறித்து ரஷிய விண்வெளி ஆய்வு நிறுவனமான ராஸ்காஸ்மோஸ் தெரிவித்துள்ளதாவது:
சோயுஸ் 2}1ஏ ராக்கெட் மூலம் ஒரு புகைப்பட செயற்கைக்கோள் மற்றும் 72 மைக்ரோ செயற்கைக்கோள் என மொத்தம் 73 செயற்கைக்கோள்கள் சனிக்கிழமை மதியம் 12.13 மணிக்கு (இந்திய நேரப்படி) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சுமார் 8 மணி நேர பயணத்துக்குப் பிறகு அனைத்து செயற்கை கோள்களும் முன்னர் தீர்மானிக்கப்பட்ட அதனதன் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
உலகிலேயே முதல் முறையாக, மிகவும் சிக்கலான செயற்கைக்கோள்களை ஏவும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
விண்ணில் செலுத்தப்பட்டுள்ள கனோபஸ் }வி}ஐகே என்ற புகைப்பட செயற்கைக்கோள் பூமியை பரந்த கோணத்தில் படம் எடுத்து அனுப்பும். இதன் மூலம், காட்டுத் தீ ஏற்படும் பகுதிகளை துல்லியமாக கண்டறியலாம் என்பதுடன் நிலப்பகுதி வரைபடங்களை மேம்படுத்தவும் முடியும் என்று ராஸ்காஸ்மோஸ் தெரிவித்துள்ளது.
ரஷியா விண்ணில் செலுத்திய 72 நுண் செயற்கைக்கோள்களில், ஜப்பான், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகள் தயாரித்த 10 செயற்கைக்கோள்கள் உள்பட அமெரிக்கா வடிவமைத்த 62 நானோ செயற்கைக்கோள்களும் அடங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com