டிஜிட்டல் யுகத்தை கணித்த ஜோதிடர் மார்ஷல் மெக்லூஹனுக்கு டூடுல் போட்டு சிறப்பித்த கூகுள்!

இன்டர்நெட் உலகை 30 வருடங்களுக்கு முன்பே கணித்துக் கூறிய மார்ஷல் மெக்லுஹன் பிறந்த நாளுக்கு டூடுல் போட்டு கூகுள் வெள்ளிக்கிழமை சிறப்பித்தது.
டிஜிட்டல் யுகத்தை கணித்த ஜோதிடர் மார்ஷல் மெக்லூஹனுக்கு டூடுல் போட்டு சிறப்பித்த கூகுள்!

கனடாவின் அல்பெர்டா மாகாணத்தின் எட்மான்டன் என்ற ஊரில் ஜூலை 1911-ம் ஆண்டு பிறந்தவர் ஹெர்பட் மார்ஷல் மெக்லூஹன்.

பேராசிரியர், விரிவுரையாளர், எழுத்தாளர், விளம்பரதாரர், பத்திரிகையாளர் மற்றும் சமூக சித்தாந்தங்கள் நிறைந்த பன்முகத் திறமை கொண்டவர். டிசம்பர் 31, 1980-ம் ஆண்டில் மறைந்தார்.

'த மீடியம் ஈஸ் தி மெஸேஜ்' என்ற தனது கொள்கையை திறம்பட விளக்கியவர். அதிலும் குறிப்பாக மனிதனின் வளர்ச்சியை நான்கு விதமாகப் பிரித்தவர். அவை ஒலி யுகம், இலக்கிய யுகம், அச்சு யுகம், டிஜிட்டல் யுகம் ஆகியன ஆகும். 

இதில், வரும் தலைமுறையை இன்டர்நெட் தான் ஆளும், இது டிஜிட்டல் யுகமாக அமையும் என்பதை தனது சமகாலத்திலேயே கணித்தவர். அதாவது இன்டர்நெட் என்பது கண்டுபிடிக்கப்பட்டதற்கு 30 வருடங்களுக்கு முன்பே அதனை கணித்து கூறினார்.

அந்த 4 யுகங்களின் கணிப்பை முன்மாதிரியாகக் கொண்டு நான்கு புகைப்படங்களுடன் மார்ஷலின் 106-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு டூடுல் போட்டு சிறப்பித்தது கூகுள்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com