உங்களுக்கே தெரியாமல் உங்கள் கணக்கினை ஊடுருவ உதவும் பேஸ்புக்: வெளியான அதிர்ச்சித் தகவல்! 

பேஸ்புக் நிறுவனமானது கணக்குகளை மீட்டெடுக்கும் முறையில் செய்துள்ள சிறு தவறின் காரணமாக,   உங்களுக்கே தெரியாமல் உங்கள் பேஸ்புக் கணக்கினை மற்றவர்களால் ஊடுருவ முடியும்... 
உங்களுக்கே தெரியாமல் உங்கள் கணக்கினை ஊடுருவ உதவும் பேஸ்புக்: வெளியான அதிர்ச்சித் தகவல்! 

லண்டன்: பேஸ்புக் நிறுவனமானது கணக்குகளை மீட்டெடுக்கும் முறையில் செய்துள்ள சிறு தவறின் காரணமாக,   உங்களுக்கே தெரியாமல் உங்கள் பேஸ்புக் கணக்கினை மற்றவர்களால் ஊடுருவ முடியும் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக லண்டனிலிருந்து வெளியாகும் 'இன்டிபெண்டண்ட்' இதழில் வெளியாகியுள்ள தகவல் பின்வருமாறு:

உங்களது பேஸ்புக் கணக்கின் பாஸ்வோர்ட் தேவையில்லாமலேயே உங்கள் கணக்கினில் மற்றவர்கள் ஊடுருவ முடியும் என்பது தற்பொழுது வெளிச்சதுக்கு வந்துள்ளது. லண்டனைச் சேர்ந்த 18 வயது  மாணவர் ஜேம்ஸ் மார்டின்ட்லே. இணையதள பாதுகாப்பு ஆராய்ச்சியாளராக இருக்கிறார்.

இவர் சமீபத்தில் தனது அலைபேசியில் புதிய சிம்கார்ட் ஒன்றை நுழைக்க முயற்சித்துள்ளார். அந்த புதிய எண்ணானது அவரது பேஸ்புக் கணக்குடன் இணைக்கப்படாத பொழுதும், 'அவர் தனது பேஸ்புக் கணக்கில் சிறிது நேரமாக செயல்படவில்லை' என்று அவரது அலைபேசிக்கு பேஸ்புக்கிடம் இருந்து குறுந்தகவல் வந்துள்ளது.  

உடனே அவர் தனது புதிய எண்னை பயன்படுத்தி பேஸ்புக்கில் தேடிய பொழுது வேறொரு நபரின் கணக்கு தென்பட்டுள்ளது. ஜேம்ஸ் அந்த குறிப்பிட்ட அலைபேசி எண்ணை உபயோகித்து, எதோ ஒரு பாஸ்வோர்டுடன் குறிப்பிட்ட பேஸ்புக் கணக்கினுள் உள்நுழைய முயற்சித்துள்ளார்.  ஆனால் அது பயன் அளிக்கவில்லை.

எனவே அவர் பேஸ்புக்கில் உள்ள கணக்கு மீட்பு (அக்கவுண்ட் ரெக்கவரி) வசதியினை கிளிக் செய்துள்ளார். அதில் அவருக்கு வந்துள்ள ஆறு வழிமுறைகளில், எந்த அலைபேசி எண்ணை உபயோகித்து அந்த குறிப்பிட்ட பேஸ்புக் கணக்கினுள் தவறாக நுழைய முயற்சித்தாரோ, அந்த எண்ணுக்கு குறுந்தகவல் மூலம் பாஸ்வோர்ட் மாற்றுவதற்கான ரகசிய கோடினை பெறுவதும் ஒன்றாகும். அதனை அவர் உடனடியாக செயல்படுத்திய பொழுது, ரகசிய கோடின் மூலம் அந்த கணக்கினுள் நுழைய முடிந்தது.         

அதன்படி அவர் குறிப்பிட்ட கணக்கின் பாஸ்வோர்ட்டினை மாற்றாவிட்டால், கணக்குக்கு உரிய நபரால், தனது கணக்கினுள் அந்நியர் ஒருவர் பிரவேசித்துள்ளார் என்பதனைக் கூட அறிய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது    

இவ்வாறு அந்த செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com