குறைந்து வரும் எய்ட்ஸ் மரணங்கள்

குறைந்து வரும் எய்ட்ஸ் மரணங்கள்

எய்ட்ஸ் நோயால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளதாக ஐ.நா. அறிவித்துள்ளது.

எய்ட்ஸ் நோயால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளதாக ஐ.நா. அறிவித்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் எய்ட்ஸ் அறிவியல் மாநாடு வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
அதனையொட்டி, ஐ.நா. வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2016-ஆம் ஆண்டில், எய்ட்ஸ் நோய் காரணமாக உலகம் முழுவதும் 10 லட்சம் பேர் உயிரிழந்தனர். இது கடந்த 2005-ஆம் ஆண்டில் எயிட்ஸ் நோய்க்குப் பலியானவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் ஏறத்தாழ பாதியாகும். அந்த ஆண்டில் 19 லட்சம் பேர் எய்ட்ஸ் நோய் காரணமாக மரணமடைந்தனர்.
இதுமட்டுமன்றி, எய்ட்ஸ் நோய்த் தொற்றுக்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்து வருகிறது. மேலும், எய்ட்ஸ் நோயாளிகளின் வாழ்நாளை நீடிக்கச் செய்யும் மருத்துவ வசதி, அதிகம் பேருக்குக் கிடைக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டில் மட்டும், 3.67 கோடி எயிட்ஸ் நோயாளிகளுக்கு மருத்து வசதி கிடைத்துள்ளது. இதன் மூலம், முதல் முறையாக எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆயுள் நீட்டிப்பு மருத்துவ வசதியைப் பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டிஸ் 18 லட்சம் பேருக்கு புதிதாக எய்ட்ஸ் நோய் பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனினும், கடந்த 1997-ஆம் ஆண்டில் எய்ட்ஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையான 35 லட்சத்துடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com