"பொலிவுறு நகரங்கள்' திட்டம் சுற்றுச்சூழலை பாதிக்கும்

உள்கட்டமைப்பு மற்றும் மக்களின் பயன்பாட்டுத் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாவிட்டால் இந்தியாவின் "பொலிவுறு நகரங்கள்' திட்டம் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பிரிட்டனின் லிங்கன்
"பொலிவுறு நகரங்கள்' திட்டம் சுற்றுச்சூழலை பாதிக்கும்

உள்கட்டமைப்பு மற்றும் மக்களின் பயன்பாட்டுத் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாவிட்டால் இந்தியாவின் "பொலிவுறு நகரங்கள்' திட்டம் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பிரிட்டனின் லிங்கன் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் நகரங்களில் அதிவேகமாக உயர்ந்து வரும் மக்கள்தொகையை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் 100 பொலிவுறு நகரங்களை (ஸ்மார்ட் சிட்டி) அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அத்திட்டத்தின் ஒரு பகுதியாக, தற்போது நகரங்களிலுள்ள 3 முதல் 5 வரை அடுக்குகள் கொண்ட கட்டடங்களுக்குப் பதிலாக 40 முதல் 60 வரையிலான அடுக்குகளைக் கொண்ட கட்டடங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து, பிரிட்டனின் லிங்கன் பல்கலைக்கழக நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது:
2015-ஆம் ஆண்டில் பொலிவுறு நகரங்கள் திட்டத்தை இந்திய அரசு அறிவித்தபோது, அந்தத் திட்டத்தால் நீடித்து நிலைத்திருக்கக் கூடிய, சுற்றுச்சூழலுக்கு சாதகமான, சாதுர்யமான வளர்ச்சி ஏற்படும் என்று கூறப்பட்டது.
எனினும், அந்தத் திட்டத்தை ஆய்வு செய்ததில், பொலிவுறு நகரங்களில் மக்கள் நெருக்கம் மிகவும் அதிகரிக்கும் நிலையில், மின்சாரம், குடிநீர் போன்ற ஆதாரங்கள் மிக அதிக அளவில் தேவைப்படும்.
மேலும், கழிவு நீர், குப்பை போன்ற கழிவுகளும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் புகை மாசுக்கள் ஆகியவை மிக அதிக அளவில் வெளியேற்றப்படும் என்பது தெரியவந்துள்ளது.
எனவே, இத்தகைய பொலிவுறு நகரங்களுக்குத் தேவையான வள ஆதாரங்களை போதிய அளவில் அளிப்பதற்கும், அந்த நகரங்கள் வெளியேற்றும் கழிவுகளை சிறப்பான முறையில் அப்புறப்படுத்தவும், இந்தத் திட்டத்தில் அதீத முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அவ்வாறு முக்கியத்துவம் அளிக்கத் தவறினால், பொலிவுறு நகரங்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்று அந்த ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
மும்பையில் 16.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி பொலிவுறு நகர் குறித்த புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com