பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்புப் படையில் பெண்கள் நியமனம்

பயங்கரவாத தடுப்பு படைப் பிரிவில் முதல் முறையாக 40-க்கும் மேற்பட்ட பெண்களை நியமனம் செய்து பாகிஸ்தானின் சிந்து மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்பு படைப் பிரிவில் முதல் முறையாக 40-க்கும் மேற்பட்ட பெண்களை நியமனம் செய்து பாகிஸ்தானின் சிந்து மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:
பாகிஸ்தான் சிந்து மாகாண வரலாற்றில் முதல் முறையாக பயங்கரவாத தடுப்புப் படைப் பிரிவுக்கு 46 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பல்வேறுகட்ட சோதனைகள், நேர்முகத்தேர்வுகள் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளை அடுத்து அந்தப் பெண்கள் பயங்கரவாத தடுப்பு அதிரடிப் படைப்பிரிவுக்கு தேர்வாகியுள்ளனர். அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் அனைத்தையும் பாகிஸ்தான் ராணுவம் வழங்கும்.
ஆறு மாத பயிற்சி காலத்துக்குப் பிறகு, பயங்கரவாத தடுப்புப் படைப்பிரிவில் அந்தப் பெண்கள் அனைவரும் காவலராக பணியில் அமர்த்தப்படுவர் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். புலனாய்வுத் தகவல் சேகரிப்பு, பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பயங்கரவாத தடுப்புப் படைப் பிரிவுக்கு கிராமம் மற்றும் நகர்ப்புறங்களைச் சேர்ந்த 46 பெண்கள் மற்றும் 1,461 ஆண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com