"வட கொரியாவின் ஏவுகணை திட்டம் ரஷியாவுக்கு அச்சுறுத்தல்'

"வட கொரியாவின் ஏவுகணை திட்டம் ரஷியாவுக்கு அச்சுறுத்தல்'

வட கொரியாவின் ஏவுகணை திட்டம் ரஷியாவுக்கு நேரடி அச்சுறுத்தலாகும் என்று ரஷிய அமைச்சர் தெரிவித்தார்.

வட கொரியாவின் ஏவுகணை திட்டம் ரஷியாவுக்கு நேரடி அச்சுறுத்தலாகும் என்று ரஷிய அமைச்சர் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை பேசும்போது ரஷிய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அலெக்சாண்டர் ஃபோமின் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியது: வட கொரியா விவகாரத்தில் அமைதியான முறையில் தீர்வு காண்பதற்காக பொருளாதாரத் தடை என்ற முறையைக் கையாள வேண்டும். அந்த நாட்டை பொருளாதார ரீதியாக நலிவடையச் செய்து முடக்கிவிடும் வகையாக அதனைப் பயன்படுத்தக் கூடாது.
வட கொரியாவின் ஏவுகணை திட்டம் எங்களுக்கு நேரடி அச்சுறுத்தலாகும். அந்த நாட்டின் வான் பாதுகாப்பு ஏவுகணை அரண் ரஷியாவுக்கு நேரடி அச்சுறுத்தல் விடும் விதமாக உள்ளது. வட கொரிய ஏவுகணைகள் அந்தப் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்யும் என்றார்.
ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் கடும் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல், வட கொரியா மேலும் புதிய ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அணு ஆயுதத்தை உருவாக்கிவிட்டதாகக் கூறும் அந்நாடு, கண்டம் விட்டு கண்டம் பாயும் திறனுள்ள தங்கள் ஏவுகணையில் அணுகுண்டைப் பொருத்தி எதிரிகளைத் தாக்க முடியும் என்று கூறியுள்ளது. தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் இது பெரும் பதற்ற நிலையைத் தோற்றுவித்துள்ளது. ரஷிய எல்லையைத் தொட்டு வட கொரியா அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com