பதினேழு ஆண்டு கால தாமதத்திற்கு பிறகு முடிவுக்கு வந்த ஒரு படப்பிடிப்பு!

ஸ்பெயினில் எழுதப்பட்ட 'டான் குவிக்சாட்' என்னும் சாகச பயணியைப் பற்றிய நாவலை  ஒட்டி எடுக்கப்பட்டு வந்த ஒரு ஆங்கிலப்படத்தின் படப்பிடிப்பானது,பதினேழு ஆண்டு கால தாமதத்திற்கு பிறகு... 
பதினேழு ஆண்டு கால தாமதத்திற்கு பிறகு முடிவுக்கு வந்த ஒரு படப்பிடிப்பு!

லாஸ் ஏஞ்சலீஸ்: ஸ்பெயினில் எழுதப்பட்ட 'டான் குவிக்சாட்' என்னும் சாகச பயணியைப் பற்றிய நாவலை  ஒட்டி எடுக்கப்பட்டு வந்த ஒரு ஆங்கிலப்படத்தின் படப்பிடிப்பானது,பதினேழு ஆண்டு கால தாமதத்திற்கு பிறகு ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் பதினாறாம் நூற்றாண்டில், மைக்கேல் டீ செர்வாண்டிஸ் என்பவரால் எழுதப்பட்டது 'டான் குவிக்சாட்' என்னும் சாகச பயணியைப் பற்றிய நாவல். தன்னை மிகவும் புகழ்பெற்ற ஒரு சாகச குதிரை வீரனாக கருதிக் கொள்ளும் நாயகன் டான் குவிக்சாட், தன்னுடைய வேலையாள் சாங்கோ பாஞ்சவுடன் மேற்கொள்ளும் வேடிக்கையான சாகச பயணமே இந்த நாவலாகும். இரண்டு தொகுதிகளாக வெளிவந்த இந்த நாவலானது, இன்றளவும் மிகவும் புகழ் வாய்ந்த ஒரு படைப்பாக கருதப்படுகிறது.

இந்த நாவலை படமாக்குவதில் ஹாலிவுட்டின் பிரபல நடிகர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இயக்குனரான டெர்ரி கில்லிம் விரும்பினார். 1980-ஆண்டின் பிற்பகுதியிலேயே தனது விருப்பதை வெளியிட்ட அவர், மிகுந்த தாமதத்திற்குப் பிறகு, 2000-ஆம் ஆண்டில் படப்பிடிப்பை துவக்கினார். இந்த படத்திற்கு 'தி மேன் ஹூ கில்ட்  டான் குவிக்சாட்' என்று அவர் பெயரிட்டார்.

படப்பிடிப்பைத் துவங்கியதில் இருந்தே டெர்ரிக்கு பல்வேறு விதமான பிரச்சினைகள் எழுந்தன. ஸ்பெய்ன் மற்றும் போர்ச்சுகல் ஆகிய இரு நாடுகளில் பல்வேறு இடங்களில் அவர் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருந்தார்.

ஆனால் ஒப்பந்தம் செய்யப்பட்ட முக்கிய நடிகர்கள் தொடர்ந்து விலகுவது, படப்பிடிப்புக்காக போடப்பட்ட செட்டுகள் வெள்ளத்திலடித்து செல்லப்படுத்தல்,  இவற்றின் காரணமாக பெரும் பொருள் இழப்பு, இன்னும்  பல பிரச்சினைகள் என தொடர்ந்து பல பிரச்சினைகள் எழுந்ததன் காரணமாக தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்த டெர்ரியால் இயலவில்லை. இந்த சமயத்தில் இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் நடிப்பதாக கூட பேச்சுக்கள் எழுந்தது.

இந்த படத்திற்கு ஏற்பட்ட பிரச்சினைகள் எந்த அளவிற்கு சென்றன என்றால், படப்பிடிப்பின் பொழுது ஏற்பட்ட பிரச்சினைகளை வைத்து 'லாஸ்ட் இன் லா மன்சா' என்ற பெயரில் ஆவணப் படம் ஒன்று 2002-ஆம் ஆண்டு  வெளியானது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.       

இந்நிலையில் படத்தின் இயக்குனரான டெர்ரி கில்லிம், கடந்த 4-ஆம் தேதி தன்னுடைய முகநூல் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது:

நீண்ட தாமதத்திற்கு மன்னியுங்கள்.எல்லா வேலைகளையும் முடித்து வீட்டுக்கு மூட்டை கட்டிக் கொண்டிருக்கிறேன்.17 வருடங்களுக்குப் பிறகு, நாங்கள் 'தி மேன் ஹூ கில்ட்  டான் குவிக்சாட்'  படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்த விட்டோம்.    எங்கள் குழுவினருக்கும், எங்கள் மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

இவ்வாறு டெர்ரி தெரிவித்திருந்தார். தற்பொழுது இந்த படத்தில்  ஆடம் ட்ரைவர், ஜோனாதன் பிரைஸ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com