106 பேருடன் கடலில் விழுந்தது மியான்மர் விமானம்

நூற்றுக்கும் மேற்பட்டோருடன் மியான்மர் ராணுவ விமானம் கடலில் புதன்கிழமை விழுந்து நொறுங்கியது.
மியான்மர் விமானப் படையைச் சேர்ந்த ஒரு ஒய்-8எஃப்-200 ரக விமானம் (கோப்புப் படம்).
மியான்மர் விமானப் படையைச் சேர்ந்த ஒரு ஒய்-8எஃப்-200 ரக விமானம் (கோப்புப் படம்).

நூற்றுக்கும் மேற்பட்டோருடன் மியான்மர் ராணுவ விமானம் கடலில் புதன்கிழமை விழுந்து நொறுங்கியது.
அந்த விமானத்தின் சிதறிய பாகங்கள் அந்தமான் கடலில் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
மியீக் நகரிலிருந்து யாங்கூன் நகருக்குச் சென்று கொண்டிருந்த மியான்மர் விமானப் படைக்குச் சொந்தமான ஒய்-8எஃப்-200 ரக விமானம் நடுவானில் மாயமானது.
உள்ளூர் நேரப்படி நண்பகல் 1.35 மணிக்கு கட்டுப்பாட்டு அறையுடன் அந்த விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அப்போது அந்த விமானம் 18,000 அடிக்கு மேலே பறந்து கொண்டிருந்தது.
மாயமான விமானத்தைக் கண்டறிய, கடற்படை கப்பல்களும், விமானங்களும் மதியம் முதல் தீவிர தேடுதல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன. இந்த நிலையில், தாவேய் நகருக்கு 218 கி.மீ. தொலைவிலுள்ள அந்தமான் கடல் பகுதியில், மாயமான விமானத்தின் சிதறிய பாகங்கள் கண்டறியப்பட்டதாக மியீக் நகர சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தகவலை விமானப் படை வட்டாரங்களும் உறுதி செய்தன. விமானத்தின் எஞ்சிய பாகங்களையும், அதிலிருந்த பயணிகளையும் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானம் விபத்துக்குள்ளானபோது அதில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.
கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, அந்த விமானத்தில் 106 பேர் இருந்ததாகவும், அவர்களில் 10-க்கும் மேற்பட்டோர் சிறுவர்கள் எனவும் தெரிகிறது. மியான்மரில் இது பருவமழைக் காலம்தான் என்றாலும், விமானம் மாயமானபோது அந்தப் பகுதியில் மோசமான வானிலை நிலவியதாக தகவல்கள் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com