மலேசியாவுக்குள் நுழைய வைகோவுக்கு அனுமதி மறுப்பு: பாஸ்போர்ட் பறிமுதல்

மலேசியாவுக்குள் நுழைய மதிமுக பொதுச் செயலர் வைகோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவரது பாஸ்போர்ட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மலேசியாவுக்குள் நுழைய வைகோவுக்கு அனுமதி மறுப்பு: பாஸ்போர்ட் பறிமுதல்


கோலாலம்பூர்: மலேசியாவுக்குள் நுழைய மதிமுக பொதுச் செயலர் வைகோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவரது பாஸ்போர்ட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பினாங்கு துணை முதல்வர் ராமசாமி இல்லத் திருமண விழாவில் பங்கேற்க நேற்று இரவு மலேசியா புறப்பட்டுச் சென்ற வைகோ, கோலாலம்பூர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

மலேசிய நாட்டுக்கு ஆபத்தானவர்கள் பட்டியலில் வைகோவின் பெயர் இருப்பதாகவும், வைகோ மீது இலங்கையில் பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும் மலேசிய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், வைகோ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் மலேசிய அதிகாரிகள் கூறி, அவரை மலேசியாவுக்குள் நுழைய அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டனர். வைகோவின் பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்தனர்.

இன்று இரவு 10.45 மணிக்கு மாற்று விமானத்தில் வைகோ சென்னைக்கு திருப்பி அனுப்பப்படுகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பினாங்கு துணை முதல்வர் ராமசாமி இல்லத் திருமண விழாவில் பங்கேற்க வைகோ வந்திருப்பது குறித்து தெரிவிக்கப்பட்டும், அவரை மலேசியாவுக்குள் அனுமதிக்க விமான நிலைய அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com