மீண்டும் ஏவுகணைகளை ஏவி வட கொரியா சோதனை

தரையிலிருந்து கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை செலுத்தி வட கொரியா வியாழக்கிழமை சோதனை நடத்தியதாக தென் கொரியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தரையிலிருந்து கப்பல்களைத் தாக்கி அழிக்கும்  வட கொரிய ஏவுகணை (கோப்புப் படம்)
தரையிலிருந்து கப்பல்களைத் தாக்கி அழிக்கும் வட கொரிய ஏவுகணை (கோப்புப் படம்)

தரையிலிருந்து கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை செலுத்தி வட கொரியா வியாழக்கிழமை சோதனை நடத்தியதாக தென் கொரியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
வட கொரியா அடையாளம் தெரியாத பல ஏவுகணைகளை விண்ணில் செலுத்தி பரிசோதனை நடத்தியுள்ளது. இந்த ஏவுகணைகள் தரையிலிருந்து கடலில் செல்லும் கப்பல்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்டவையாக கருதப்படுகிறது. இந்த ஏவுகணை சோதனை கேங்வோன் மாகாணம் வொன்சன் நகரத்துக்கு அருகே வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனையால் தென் கொரியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கண்காணிப்பு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தென் கொரியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஐந்து வாரங்களில் வட கொரியா நடத்தும் நான்காவது ஏவுகணை சோதனை இதுவாகும். ஐ.நா. மற்றும் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை எச்சரிக்கைகளை மீறி வட கொரியா இந்த ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com