இணையத்தில் கசிந்த இருபது கோடி வாக்காளர்களின் விபரங்கள்!

அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனம் ஒன்றின் தவறால், இருபது கோடி வாக்காளர்களின் விபரங்கள் இணையத்தில் கசிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இணையத்தில் கசிந்த இருபது கோடி வாக்காளர்களின் விபரங்கள்!

வாஷிங்க்டன்: அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனம் ஒன்றின் தவறால், இருபது கோடி வாக்காளர்களின் விபரங்கள் இணையத்தில் கசிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவிற்கு பொறுத்தவரை தேர்தல்களில் ஓட்டு போடுவதற்கு பதிவு செய்துள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை இருபது கோடியாகும். அந்த பட்டியல்களில் ஆய்வு செய்வதற்காக அவை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் கொடுக்கப்படுவது வழக்கம்.

அவ்வாறு குடியரசுக் கட்சியிடம் வழங்கப்பட்ட வாக்காளர்கள் தகவல் தொகுப்பிலிருந்துதான் தற்பொழுது தகவல்கள் கசிந்துள்ளது. பட்டியல்களில் பகுப்பாய்வு செய்யும் பொருட்டு மூன்று மென்பொருள் நிறுவனங்களை குடியரசு கட்சி நியமனம் செய்தது.

அவ்வாறு நியமிக்கப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான 'டீப் ரூட்' என்னும் நிறுவனத்தின் கணிப்பொறிகளில் நிகழ்ந்த, தரவேற்ற சோதனையில் உண்டான தவறு ஒன்றின் காரணமாக ஏறத்தாழ 19 கோடிக்கும் மேலான வாக்காளர்களின் தகவல்கள் இணையத்தில் கசிந்தன.

வெளியான தகவல்களில் வாக்காளர்களின் பெயர்கள், பிறந்த நாட்கள், முகவரிகள் இன்ன பிற விபரங்கள் ஆகியன அடங்கும். இந்த தகவல் கசிவு தொடர்பான தகவலை முதன் முதலாக இணையதளபாதுகாப்பு நிறுவனமான 'அப் கார்ட்' வெளிக்கொண்டு வந்தது என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com