சீனப் பெருஞ்சுவர் மீது யோகா செய்த ஆர்வலர்கள்!

சர்வதேச யோகா தினத்தை (ஜூன் 21) முன்னிட்டு, சீனப் பெருஞ்சுவர் மீது செவ்வாய்க்கிழமை நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சியில் ஏராளமான இந்திய மற்றும் சீன ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
சர்வதேச யோகா தினத்தை (ஜூன் 21) முன்னிட்டு, பெய்ஜிங்கில் சீனப் பெருஞ்சுவர் மீது செவ்வாய்க்கிழமை 'பிராமரி பிராணாயாமம்' என்ற யோகப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் உ

இந்த நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் பங்கேற்று, யோகாசனம் செய்தார். முன்னதாக, பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பெய்ஜிங் வந்திருந்த அவர் தனது பயணத்தை முடித்துக் கொண்டு விமான நிலையம் செல்வதற்கு முன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அங்கு திரண்டிருந்த ஆர்வலர்களிடையே அவர் பேசுகையில், யோகாசனத்தின் சிறப்பு குறித்து விளக்கினார். யோகாசனம் என்பது இந்தியா உலகிற்கு அளித்துள்ள பரிசு என்ற மோடியின் கருத்தை வி.கே.சிங் மேற்கோள் காட்டினார்.
இந்த நிகழ்ச்சிக்கு இந்தியத் தூதரகம், வெளிநாடுகளான நட்புறவுக்கான சீன மக்கள் அமைப்பு, யோகி யோகா என்ற யோகாசனப் பள்ளி ஆகியவை கூட்டாக ஏற்பாடு செய்திருந்தன.
இது தொடர்பாக இந்தியத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், "சீனப் பெருஞ்சுவர் மீது இந்திய மற்றும் சீன யோகாசன ஆர்வலர்கள் கூட்டாக யோகப் பயிற்சியில் ஈடுபடுவது இதுவே முதல் முறை. இது ஒரு கலாசார மைல்கல்' என்று தெரிவித்திருந்தது.
இந்தியா-சீனா இடையிலான கலாசாரப் பரிமாற்றத்தை முன்னெடுத்துச் சென்ற இந்த நிகழ்ச்சியை இந்தியத் தூதரக அதிகாரி அமித் நரங்கும், வெளிநாடுகளான நட்புறவுக்கான சீன மக்கள் அமைப்பின் துணைத் தலைவர் லின் யீயும் பாராட்டிப் பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 200 ஆர்வலர்கள் யோகாசனம் குறித்த விளக்கங்களை அளித்தனர். இந்தியாவில் உள்ள மொரார்ஜி தேசாய் கல்வி நிலையத்தைச் சேர்ந்த 20 மாணவர்கள் பல்வேறு ஆசனங்களைச் செய்து காட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com