சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100 பேர் மாயம்

சீனாவின் சூச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 100 பேர் புதைந்தனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100 பேர் மாயம்

பீஜிங்: சீனாவின் சூச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 100 பேர் புதைந்தனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நிலச்சரிவில் அதிகமானவர்கள் சிக்கி இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

சூச்சுவான் மாகாணத்தில் இன்று உள்ளூர் நரேப்படி சுமார் காலை 6 மணியளவில் வோஷியக் கவன்ட் பகுதியில் மழை பெய்தது. இதையடுத்து அபபகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் அப்பகுதியில் உள்ள 40 குடும்பங்களில் உள்ள 100 சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.  

நிலச்சரிவைத் தொடர்ந்து உள்ளூர் அதிகாரிகள் தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் என 500க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

நிலச்சரிவு குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லாத நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com